உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி., துக்காராம் குடும்பத்திற்கு சண்டூர் சீட் வழங்க எதிர்ப்பு

எம்.பி., துக்காராம் குடும்பத்திற்கு சண்டூர் சீட் வழங்க எதிர்ப்பு

பல்லாரி: சண்டூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராம் குடும்பத்திற்கு சீட் வழங்க, கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பல்லாரி சண்டூர் சட்டசபை தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு, தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது.சண்டூர் எம்.எல்.ஏ.,வாக இருந்து, தற்போது பல்லாரி காங்கிரஸ் எம்.பி.,யாக உள்ள துக்காராம், தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது, 'சீட்' தர வேண்டும் என்று கேட்கிறார்.ஆனால் துக்காராம் குடும்பத்திற்கு சீட் வழங்க, சண்டூர் தொகுதி காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். துக்காராம், தொண்டர்களை அரவணைத்துச் சென்றது இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.வேறு யாருக்காவது சீட் தந்தால், அவரது வெற்றிக்காக உழைப்போம் என்றும் கூறுகின்றனர். இதனால் யாருக்கு சீட் என்பதில் முடிவு எடுக்க முடியாமல், சந்தோஷ் லாட் குழப்பத்தில் உள்ளார்.சண்டூர் தொகுதியில் இருந்து, நான்கு முறை துக்காராம் வெற்றி பெற்றதன் பின்னணியில், சந்தோஷ் லாட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை