மேலும் செய்திகள்
புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்
21-Nov-2025
4 தொழிலாளர் நலச்சட்டங்கள் அமல்: சாதக பாதகங்கள் என்ன?
10 hour(s) ago
புதுடில்லி: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டங்கள் உழைக்கும் மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் இருப்பதாக வர்த்தக சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவதற்காக மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை கடந்த, 2020ல் அறிமுகம் செய்தது. அந்த நான்கு சட்டங்களும் அமலுக்கு வந்துள்ளதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஊதியச்சட்டம்- 2019, தொழில் உறவுச் சட்டம்- 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம்- 2020, தொழிலக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், பணிச்சூழல் சட்டம்- 2020 ஆகிய சட்டங்கள் அறிமுகமாகின. இதன் மூலம் ஏற்கனவே அமலில் இருந்த, 29 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்படுகின்றன. புதிய சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் குறைந்தபட்ச ஊதியம், பாலின பாகுபாடு இன்றி பெண்களுக்கும் சம ஊதியம், 40 கோடி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு பின் பணிக்கொடை, 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்திய இந்த நான்கு சட்டங்களுக்கும், 10 வர்த்தக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக மோசடி செய்யும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை இந்த சட்டங்கள் உறுதி செய்கின்றன. அதே சமயம், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறது. பணியமர்த்தப்படும் தொழிலாளர்களை எளிதாக பணியில் இருந்து நீக்க இந்த சட்டங்கள் வழி வகை செய்கின்றன. எனவே, இந்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய தொழிலாளர் சட் டங்களுக்கு எதிராக, வரும், 26ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும், வர்த்தக கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
21-Nov-2025
10 hour(s) ago