உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் 3வது மொழியாக ஹிந்தி கட்டாயமாக்க வலுக்கும் எதிர்ப்பு

மஹாராஷ்டிராவில் 3வது மொழியாக ஹிந்தி கட்டாயமாக்க வலுக்கும் எதிர்ப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை 5ம் வகுப்பு வரை கற்பிக்க முடிவு செய்துள்ள மாநில அரசின் முடிவுக்கு மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தற்போது மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் 1 முதல் 4ம் வகுப்பு வரை இந்த இரு மொழிகளே கட்டாய மொழியாக கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய கல்வி கொள்கை 2020ன் படி வரும் கல்வி ஆண்டு முதல் 5ம் வகுப்பு வரை மும்மொழி கொள்கையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்மொழி திட்டத்தை படிப்படியாக அறிமுகம் செய்ய மஹா., அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி மராத்தி, ஆங்கிலத்துடன் ஹிந்தியை மூன்றாவது மொழியாக கற்பிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பட்னவிஸ் அரசின் இந்த முடிவுக்கு மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்தியை 5ம் வகுப்பு வரை கட்டாயமொழி பாடமாக்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அனைத்திலும் ஹிந்தி என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஹிந்தி தேசியமொழி அல்ல. அது நாட்டில் உள்ள மற்ற மொழிகளை போல் ஒரு மாநில மொழியே.அதை ஏன் மஹாராஷ்டிராவில் தொடக்க கல்வியில் கற்பிக்க வேண்டும். நாங்கள் ஹிந்துக்கள் தான் ஆனால் ஹிந்திக்காரர்கள் அல்ல. மாநிலத்தை ஹிந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Gnana Subramani
ஏப் 18, 2025 22:11

மும்பை முழுக்க பெயர்ப்பலகைகள் இந்தியில் தான் உள்ளது. மராத்தியில் இல்லை


Balasubramanian
ஏப் 18, 2025 14:43

அரசியலில் ஒதுக்கப்பட்ட ராஜ் தாக்கரேக்கு வேறு வேலை இல்லை! அவர் மும்பை தாதாவாக ஆகி வருகிறார்


Rangarajan Cv
ஏப் 18, 2025 17:07

He is irrelevant in Mumbai also. Only nuisance value. Will fear in the minds of outsiders who are not good at Marathi.


venugopal s
ஏப் 18, 2025 13:42

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மராத்தி, ஆங்கிலம், ஹிந்தி என்று மும்மொழிக் கொள்கை ஏற்கனவே இருப்பது தான்.அதை இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் அமல்படுத்தி உள்ளனர். ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுமையான விஷயம்!


மணியன்
ஏப் 18, 2025 19:04

ஒரு கொடுமையும் இல்லை ஹிந்திக்கும் மராட்டிக்கும் பெரிய வித்தியாசமில்லை இரண்டுக்கும் ஒரே எழுத்துதான்.ஏற்கனவே மஹராஷ்ட்ராவில் 80 சதவிகிதம் மக்களுக்கு ஹிந்தி தெரியும்.ராஜ் டாக்டரே அப்பப்ப இருப்பைக்காட்ட இப்படி உளறுவது வழக்கம்தான்.


தமிழ்வேள்
ஏப் 18, 2025 19:55

தமிழகத்தில் ஹிந்தி பிரசார சபாவின் பிரவேஷ் தேர்வை மூன்று நான்கு வகுப்பு மாணவர்கள் அதிகம் பேர் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்..அப்புறம் என்ன கொடுமை...கடுமை என்று உருட்டு? 200 ஓவா கெடச்சுதா?


Padmasridharan
ஏப் 18, 2025 12:41

வட இந்தியாவிலேயே, வட சுட ஒத்துக்கலன்னா, பாரத_தென் இந்தியாவில எப்படி நடத்துவாங்க


என்னத்த சொல்ல
ஏப் 18, 2025 12:18

ஹிந்தி கத்துக்கிட்டா, இந்தியாவில் எந்த மூலையில் வேணும்னாலும் பானிபூரியோ, பகோடா போட்டோ பிழைத்து கொள்ளலாம். ஒரு உயரிய சிந்தனை இதில் உள்ளது. இது தெரியாம, எல்லாத்தயும் எதிர்க்க வேண்டியது...


Anbuselvan
ஏப் 18, 2025 10:11

மும்பை காரர்கள் இப்ப மட்டும் இல்லே எப்போதிலிருந்தோ எது நடைமுறை மற்றும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக உள்ளதோ அதை தனது தாய் மொழியை சிறிதளவும் பாதிக்காத வகையில் சற்றும் தயங்காமல் ஏற்று கொள்பவர்கள். அதனால்தான் ஹிந்தி மட்டும் தெரிந்தாலோ அல்லது மராட்டி மட்டும் தெரிந்தாலோ மும்பையில் ஒருவர் எளிதாக வாழ்க்கையை நடத்த முடியும். அங்கு மராட்டிய மொழி எப்போதிலிருந்தோ முதல் மொழியாக இருந்து வருகிறது. தாய் மொழியையும் விட்டு கொடுப்பதில்லை அதே சமயத்தில் வாழ்க்கைக்கு உதவும் எந்த மொழியையும் கற்று கொள்ள தடை விதித்ததும் அல்லது எதிர்த்தும் இல்லை. தமிழ் எப்போதுமே சாகாது. எல்லா பள்ளிகளிலும் ஒண்ணாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய ஆக்கினால் தமிழ் மொழி எழுத படிக்கும் மக்கள் தொகை அதிகரிக்கத்தான் செய்யும் என்பதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது. தற்போது இந்த தாய் மொழி படிப்பு கட்டாயமாக இல்லாததால் நகரங்களில் வசிக்கும் பல குடும்பத்து பிள்ளைகள் தமிழ் எழுத படிக்க முடியாதவர்களாக உள்ளனர். இந்த தாய் மொழி அல்லது தமிழ் மொழி கொள்கை, தமிழகத்தில், அனைத்து வழி எல்லா வாரிய போர்டு அல்லது சுலபமாக அனைத்து பள்ளிகளிலும் நடை முறை படுத்தினால் தமிழ் மொழியும் வளரும், குழந்தைகள் ஒரு மூன்றாம் மொழியையும் கற்று கொள்ள முடியும். இதில் சிக்கல் எப்போது வரும் என்றால் ஒரே மூன்றாம் மொழி அனைத்து அரசு பள்ளிகளிலும் எப்படி கொண்டு வருவது என்பதில்தான் வரும். இப்போதுதான் டெக்னாலஜி நன்கு வளர்ந்து உள்ளதே. மூன்றாம் மொழி படிப்பினை டெக்னாலஜி மூலமாக பயிர்விப்பிக்கலாம். இதற்கும் அறிவுஜீவிகள் ஒரு மாற்று யோசனை வழி வைத்து இருப்பார்கள். அவர்களை நாடி தமிழ்நாடு குழந்தைகளுக்கு ஒரு மொழியை அதிகமாக படிக்க வைப்பது நாளைய தலைமுறைக்கு நல்லது.


பாமரன்
ஏப் 18, 2025 09:56

இப்படியே தினிச்சு தினிச்சு இந்தியாவில் அதிகமாக புழங்கபடும் மொழியாக ஹிந்தி இருப்பதால் அதை தேசிய மொழியாக்கனும்னு சொல்லும் அப்ரசண்டிக அடுத்ததா மயிலை விட அதிக எண்ணிக்கையில் நாடு முழுவதும் இருக்கும் காக்கா அல்லது கொசுவை தேசிய பறவையாக அறிவிக்கனும்னு சொல்லுங்க...


chennai sivakumar
ஏப் 18, 2025 09:44

தமிழ் நாட்டை பொறுத்த மட்டில் தாய் மொழியாகிய தமிழை விட ஆங்கில பயன்பாடு அதிகரித்து கொண்டு வருகிறது. ஒரு சிறு உதாரணம். கடந்த 3 நாட்களுக்கு முன்னால் திருவான்மியூர் கோவில் திருவிழாவில், கோவில் வாயிலில் உள்ள நடைபாதை கடைகளிலும் விலை பட்டியல் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. போகிற போக்கில் தமிழ் நாட்டில் தமிழ் காணாமல் போய் விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது காரணம் இளைய தலை முறைகள் எல்லோரும் படிப்பு வேலை நிமித்தமாக வெளி நாடு சென்று மிக குறைந்த சிலரே தாய் நாட்டிற்க்கு திரும்புகின்றனர். அவர்களின் குழந்தைகளோ தமிழ் பேசுவார்கள் ஆனால் எழுத படிக்க தெரியாது. இப்படி மெதுவாக தமிழ் சாகும் செத்து கொண்டு இருக்கிறது. இந்த நிலைமை நீடித்தல் நல்ல அறிகுறி இல்லை


Amruta Putran
ஏப் 18, 2025 09:34

As per NEP 2020, up to 5th standard only Mother tongue. English is after that and any other Indian language as third in the middle and high schools


baala
ஏப் 18, 2025 09:33

விருப்பப்பட்டு படிக்கட்டுமே. நீங்கள் ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்.


சமீபத்திய செய்தி