உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாயை பிடிக்க உத்தரவு: மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி, ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

நாயை பிடிக்க உத்தரவு: மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி, ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாய்க்கு ரூ.110 வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.அதுமட்டுமின்றி, டில்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் பரிதாபாத் ஆகிய இடங்களில் 6 முதல் 8 வாரங்களில் 5 ஆயிரம் நாய்களை காப்பகத்திற்கு மாற்ற வேண்டும். உடனடியாக பிடிக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.இந்த உத்தரவால் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும் என மாநகராட்சியின் முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: உணவு, போக்குவரத்து, சுத்தம் செய்தல், மருத்துவ பராமரிப்பு மற்றும் வேலையாட்களுக்கு சம்பளம் என ஒரு நாய்க்கு தினமும் ரூ.110 செலவாகும்.டில்லியில் உள்ள 10 லட்சம் தெருநாய்கள் அனைத்தும் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தற்போது டில்லி மாநகராட்சி தினமும் 350க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து கருத்தடை செய்து, 10 நாள் கண்காணிப்புக் காலத்திற்கு பிறகு விடுவிக்கிறது. கருத்தடை செயல்முறைக்கு ஒரு நாய்க்கு ரூ.ஆயிரம் செலவு ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

jenifer stephen
ஆக 17, 2025 11:55

தேங்க்ஸ் போர் கோவெர்மென்ட் ப்ரொவிடே திஸ் ஆர்டர்.


Ravi Kumar
ஆக 16, 2025 12:20

சென்னையில் எப்போது தெருநாய்களை பிடிப்பார்கள். சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. மாநகராட்சி இந்த வேலைகளை செய்வார்கள். ஆனால் அவர்கள் கூட இப்போது கண்டு கொள்வதில்லை.


subramanian
ஆக 15, 2025 20:11

செலவு மிகவும் கொஞ்சமாக உள்ளதால் இன்னும் கொஞ்சம் ஏற்றி கொடுத்தால் விரைவில் வேலை முடியும்


subramanian
ஆக 15, 2025 12:37

அப்போ 10 லட்சம் தெருநாய்கள் நகரத்தில் உள்ளன போல சபாஷ்


sasikumaren
ஆக 15, 2025 04:10

தெரு நாய்கள் பலருக்கும் தொல்லை தருகிறது அதை பிடித்து தனிமை இடத்தில் அடைத்து கொள்ள போகிறீர்கள் அதிகரித்து வரும் மக்கள் தொகையை எப்போது கட்டுபடுத்த போகிறீர்கள் அதற்கு எவனாவது பதில் சொல்ல முடியுமா அதை விட கொடுமை நிறைய திருந்தாத குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது அவன் கட்டுபடுத்த வழி தெரியுமா அல்லது கொன்று புதைக்க வழி இருக்கிறதா அதை எந்த அரசியல் வியாதிகள் நீதிபதிகள் யோசிப்பது கூட இல்லையே இதற்கு தீர்வு எப்போது எடுப்பார்கள்?


Vignesh Sivaram A G
ஆக 15, 2025 12:28

வந்துட்டாரு நம்ம "அனிமல் ரைட்ஸ் ஏக்டிவிஸ்ட்". நீங்கள் தெரு நாய்களுக்கு தங்குமிடம், சோறு, தண்ணீர் குடுப்பிங்கலா சார் ?? தெருவில் சுத்தும் நாய்களே ஒரு பிரச்சினை தான். அதற்கு தீர்வு சொன்னா நல்லா இருக்கும்..


N M SIVANATH
ஆக 14, 2025 20:46

வில்லாபுரம் கற்பகநகரில் ரோடு மிக மோசமாக உள்ளது. இத்துடன் அதிக நாய்களும் சுற்றி திரிகின்றன. குழந்தகைள் மிகவும் பயப்படுகிறர்கள். 2வீலரில் செல்பவர்களை கடிப்பதுப்போல் குரைத்துக் கொண்டே ஒடுகிறது.


Techzone Coimbatore
ஆக 17, 2025 18:52

அதற்கு உணவளியுங்கள். சரியாகிவிடும். உணவு கிடைக்காமல் தான் இப்படி செய்கின்றன.


Ram
ஆக 14, 2025 13:36

தெருநாய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துஙக்ள் செலவு மிச்சம்


sankaranarayanan
ஆக 14, 2025 12:30

இந்த சட்டத்தை எப்போது திராவிட மாடல் அரசு அமல் படுத்தும்


V RAMASWAMY
ஆக 14, 2025 09:55

ஒரு நாய் கடித்தால் அவர்களுக்கு உண்டாகும் அவதிகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் மரணங்களுக்கும் அரசு பொறுப்பேற்குமா?


Krishna Gurumoorthy
ஆக 14, 2025 08:39

ஒரு நாய்க்கு ₹110 ஒரு‌உபிக்கு ₹200


போராளி
ஆக 15, 2025 08:42

உனக்கு பிரியாணி அண்டா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை