காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில், பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், ராணுவ தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, ஜம்மு - காஷ்மீரில் பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். மேலும், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து பாதுகாப்பு படையினரும் விழிப்புடன் இருந்து, ஒருங்கிணைந்து செயல்படவும் அவர் அறிவுறுத்தினார்.