உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர், அமைச்சர்களை மாண்புமிகு அடைமொழியுடன் குறிப்பிட உத்தரவு

முதல்வர், அமைச்சர்களை மாண்புமிகு அடைமொழியுடன் குறிப்பிட உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர், அமைச்சர்களை, 'மாண்புமிகு' என்ற அடை மொழியுடன் அழைக்க வேண்டும்' என, அரசு அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் கட்டுப்பாட்டில் மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை செயல் படுகிறது. தற்போது நம் நாட்டில், பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பின்போது முதல்வர், அமைச்சர்களை பாரம்பரியம் மற்றும் மரியாதையுடன் அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை கடந்த 30ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கலெக்டர்கள், பல்துறை செயலர்கள், மற்றும் அலுவலக தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுமக்களிடம் இருந்து வரும் அரசு தொடர்பான புகார்கள் மற்றும் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர் முன், 'மாண்புமிகு' என்ற வார்த்தையை சேர்த்து பதில் அனுப்ப வேண்டும். இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முதல்வரின் அறிவுரையை எதிரொலிப்பதாக கூறப் படுகிறது. எனினும், எதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. இந்த உத்தரவு சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 13:50

மாண்புள்ளவர்களை மாண்புமிகு என்று அழைத்தால் அது அச்சொல்லுக்கே பெருமை .... ஆனால் அப்பா என்று சொல்லிக்கொண்டு சார்களையும் , ஞானசேகரன்களையும் ஆதரிக்கும் தறுதலைகள் >>>>


Sun
செப் 11, 2025 12:28

முதல்வர்கள், அமைச்சர்கள்தான் மாண்பு மிகு என்றால் அப்ப மற்றவர்கள் என்ன? மாண்பு இல்லாதவர்களா?


கடல் நண்டு
செப் 11, 2025 10:23

அடடே, என்ன ஒரு உண்டியல் பகுத்தறிவு?அரசியல் பிசினஸ் செய்யும் சாக்கடைகளுக்கு அடைமொழி் ஒரு கேடு.. என்ன அநியாயம் மைலாட்?? ஆஆஆ மைகாட் என்ற அடைமொழிக்கு உத்தரவு வருமோ? யஷ்வந்த் சர்மாக்களுக்கு தான் வெளிச்சம் ..


Muralidharan S
செப் 11, 2025 09:59

ஒரு சந்தேகம் - "மான்புமிகு ஜாம்பஜார் ஜக்கு அவர்களே... மான்புமிகு சைதாப்பேட்டை செயின் ஜெயபால் அவர்களே.. மான்புமிகு வீச்சு வீரா அவர்களே..மான்புமிகு பிளேடு பக்கிரி அவர்களே.." - இதுல மான்புமிகு என்பதற்கு உண்மையான அருஞ்சொற்பொருளுடன் இந்த அடைமொழி ஒத்துப்போகிறதா என்று யாராவது தமிழறிஞர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்...


Vasan
செப் 11, 2025 09:53

Please allow us to continue to fondly call as Appa We have family like bonding with CM Sir, and respec words like Honourable may distance the relationship.


KOVAIKARAN
செப் 11, 2025 08:26

மாண்பே இல்லாதவர்களை, எப்படி மாண்பு மிகு என்று அழைப்பது? மனச்சாட்சி உறுத்தாதா?


vijay
செப் 11, 2025 09:46

நான் சொல்ல நினைத்ததும் இதேதான் நண்பரே


duruvasar
செப் 11, 2025 08:08

இதுவொரு அடக்குமுறை. பாசிசம். மாண்புக்கும் அதன் வார்த்தைக்கும் சம்பத்தமேயில்லாதவர்களை மாண்புமிகு என அழைக்கபட சொல்வது அதிகாரத்தின் உச்சகட்ட மிரட்டல்கள். கேட்டு பெறுவதின் பெயர் மரியாதை இல்லை அதற்க்கு யாசகம் என பெயர்.


Chess Player
செப் 11, 2025 07:58

Communism? Everyone is a public servant. Do not ask for respect. Earn it.


Nandakumar
செப் 11, 2025 07:49

இதுதான் கம்யூனிசம். போங்க நீங்களும் உங்கள் மரியாதையும்.


V RAMASWAMY
செப் 11, 2025 07:45

அந்த அடைமொழிக்கு பொருத்தமாக நடந்துகொள்ளவும் வேண்டும். இல்லையேல் மாண்புமிகு அடைமொழி அர்த்தமற்றதாகிவிடும். பதவிக்குத்தான் மாண்புமிகு பொருந்தும், பெயருக்கு பொருந்தாது.


சமீபத்திய செய்தி