உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் மீதான அந்தப் பார்வையை மாற்ற வேண்டும்; சசி தரூர்

நாட்டின் மீதான அந்தப் பார்வையை மாற்ற வேண்டும்; சசி தரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை:பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஸ்கல் இந்தியா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் எம்பி சசி தரூர் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நாம் பல விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளன. சுற்றுலா மிகவும் முக்கியமானது.இது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இது அரசின் வருவாயை அதிகரிக்கும். நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்றது என்ற ஒரு பிம்பம் நம் நாட்டிற்கு உள்ளது. இந்த பிம்பத்தை மாற்ற வேண்டும். சுற்றுலா பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் காவலர் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். நம்மிடம் உயர்தரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது மிக மோசமான தரம் கொண்ட ஹோட்டல்கள் உள்ளன. ஆனால், நடுத்தர வசதி கொண்ட ஹோட்டல்கள் எதுவும் இல்லை. நிறைய ஹேட்டல்கள் கட்ட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
செப் 15, 2025 08:03

சாமியோவ், பெண் காவலர்களுக்கு கூட வேலை பார்க்கும் ஆண் காவலர்களால் ஏதும் பாதகம் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். .


Ranga Srinivasan
செப் 13, 2025 21:26

ஜயா, அவர் சொன்ன இரண்டும் இரு வெவ்வேறு கருத்துக்கள். சுற்றுலா வளர வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் போதாது உள் நாட்டு சுற்றுலா பயணிகளும் தேவை. அதற்கு மத்திய தர வர்க்கத்தினருக்கு ஏற்ற வசதிகள் தேவை.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 20:41

ஹோட்டல் கட்டினா பெண்களுக்கு பாதுகாப்புன்னு கண்டுபிடிச்ச சோசியல் விஞ்ஞானி. இவர் முழுநேரம் ஹோட்டலிலேயே வாழ்ந்து வருவதாலா?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 20:39

இறந்து போன உங்க மனைவிக்கு பாதுகாப்பு பத்தவில்லையா? அதுக்கு காரணமே நீங்க தான்னு சொல்றாங்களே?


முக்கிய வீடியோ