உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதி": ராஜ்நாத் சிங்

அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதி": ராஜ்நாத் சிங்

புதுடில்லி: அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதியாக உள்ளனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் பாத்நோட்டா கிராமம் அருகே பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அமைதி

இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அமைதியை நிலைநாட்ட நமது வீரர்கள் உறுதியாக உள்ளனர். இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Swaminathan L
ஜூலை 09, 2024 15:29

ஆயுதங்கள், பொருளுதவி மற்றும் ஆட்களை அனுப்பும் அண்டை நாடு, அவர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவி செய்யும் உள்ளூர்க்காரர்கள் சிலர், அந்த அண்டை நாட்டுக்குப் பரிந்து பேசும் அரசியல் பிரமுகர்கள் இருக்கும் வரை இம்மாதிரி நிகழ்வுகள் தொடரும்.


Sck
ஜூலை 09, 2024 14:29

மந்திரி அவர்களே, மறுபடியும் தீவிரவாதிகளின் அட்டகாசம் தலை தூக்குது போல. கொஞ்சம் மசமசனு இல்லாம, துரிதமாக வேல செய்யுங்க.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி