உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் பலனடைந்த 14 ஆயிரம் ஆண்கள் மஹாராஷ்டிராவில் புது மோசடி

பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் பலனடைந்த 14 ஆயிரம் ஆண்கள் மஹாராஷ்டிராவில் புது மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 14 ஆயிரம் ஆண்களும் பெற்றது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில், பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள பெண்களுக்காக மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ' லடிகி பஹின் யோஜனா ' என்ற திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. 2024 சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை ஆய்வு செய்தது. அதில் 14,298 ஆண்கள் இந்த உதவித்தொகையை பெற்றுள்ளனர். அவர்கள் முறைகேடாக பெண்களை போல் பதிவு செய்து கடந்த 10 மாதமாக மொத்தம் ரூ.21.4 கோடி நிதியை பெற்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடக்கிறது.இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: பெண்கள் நலனுக்காக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் ஏன் இந்த திட்டத்தில் பணத்தை பெற்றுள்ளனர் என தெரியவில்லை. அவர்களிடம் இருந்து பணம் திரும்பப் பெறப்படும். இல்லை என்றால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அறிக்கையில், தகுதியில்லாத பெண்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டதால் முதல் ஆண்டில் மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் நிதி பெற முடியாது என்ற விதி உள்ளது. ஆனால், 7.97 லட்சம் பெண்கள் மோசடியாக தங்களது குடும்பத்தில் 3வதாக ஒரு பெண்ணை சேர்த்து அவர்களுக்கும் பணம் வாங்கி வந்துள்ளனர். இதனால் ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டது.இந்த நிதியுதவியை 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே பெறலாம் என்ற விதியை மீறி, அந்த வயதையும் தாண்டி 2.87 லட்சம் பெண்கள் இந்த நிதியை பெற்றதால் ரூ.431.7 கோடி இழப்பு ஏற்பட்டது. கார் வைத்துள்ள 1.67 லட்சம் பெண்களும் இந்தத் திட்டத்தில் பலன்பெற்றுள்ளதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ram pollachi
ஜூலை 28, 2025 17:37

பொண்டாட்டி கவுன்சிலர் புருஷன் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. பிறகு என்ன இரண்டு மாடும் சேர்ந்து பண மூட்டையை இழுக்கிறது.


Keshavan.J
ஜூலை 28, 2025 13:57

தமிழ் நாட்டில் என்ன வாழுதாம் . இங்கே ஒரு லக்ஷம் பெண்களுக்கு கொடுக்க படும் பணம் டாஸ்மாக் போகுது, புருஷன், அண்ணன், தம்பி மற்றும் அப்பன்கள் பிடிங்கி கொண்டு சாராயம் குடிக்க போறானுங்க.


அப்பாவி
ஜூலை 28, 2025 12:33

ஆண், பெண் சமானம்னு அடிச்சு உடுறீங்களே... இதில் மட்டும் ஏன் ஓர வஞ்சனை?


Padmasridharan
ஜூலை 28, 2025 04:20

ஆணும் பெண்ணும் சரி சமமென்று சொல்லிக்கொண்டு பெண்களை காசு, இலவசங்கள், பேருந்து பயணம் கொடுத்தும் தனிப்படுத்துகின்றனர். இதனால் மற்ற மக்களும் இவர்களுக்கு இதுபோல் ஆசை காட்டி மோசம் செய்யக்கூடும் சாமி.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 01:32

எப்படியோ, டபுள் எஞ்சின் போட்டு நல்லா ஆட்டையைப, போட்டிருப்பது தெரியுது.


SANKAR
ஜூலை 28, 2025 00:39

Stalin responsible for this.Must resign!


varatharajan
ஜூலை 27, 2025 23:17

பாஜக ஆளும் மாநிலம் சூப்பர் ஊழலுக்கு இதுக்கு மேல என்ன வேணும் இதுல இங்க இருக்குறவங்க திமுக சொல்றாங்க பாஜக லட்சணம் இப்படித்தான் இருக்க ஒவ்வொரு இடத்திலும் ஏற்கனவே மகாராஷ்டிராவில் அஜித் பவர் பல கோடி ரூபாய் ஊழல் பண்ணாருன்னு சொல்லி பிஜேபி அரெஸ்ட் பண்ணி அப்புறம் எதுமே இல்லாம பண்ணாங்க ஆதாருக்கு வேண்டி அவருக்கு என்ன சலுகை கொடுக்குறாங்கன்னு பாருங்க பிஜேபி எந்த லெவலுக்கும் போகும்


சமீபத்திய செய்தி