மேலும் செய்திகள்
மூதாட்டியிடம் நகை திருட்டு
7 hour(s) ago
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் 161 ஜெலட்டின் குச்சிகள், 20 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. பள்ளி அருகே வெடிபொருட்கள் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தராகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், சால்ட் என்ற பகுதியில் 2 பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு அருகே புதரில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற மாணவர்கள் வெடிபொருட்கள் இருப்பதை முதலில் பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடனடியாக அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மர்மநபர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி அருகே வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அல்மோரா மாவட்ட எஸ்எஸ்பி தேவேந்திர பிஞ்சா தெரிவித்தார். ஜெலட்டின் குச்சிகள் என்பவை வெடிபொருட்களாகும். அவை சுரங்கம், கட்டுமானம் மற்றும் பாறைகளை உடைக்கும் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பள்ளி அருகே வெடிபொருட்கள் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
7 hour(s) ago