உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டதாரிகள் 46 ஆயிரம் பேர்; முதுகலை படித்தவர்கள் மட்டும் 6 ஆயிரம் பேர்; கேட்பது துாய்மைப்பணி!

பட்டதாரிகள் 46 ஆயிரம் பேர்; முதுகலை படித்தவர்கள் மட்டும் 6 ஆயிரம் பேர்; கேட்பது துாய்மைப்பணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானாவில் அரசு தூய்மை பணியாளர் வேலைக்கு 6 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 40 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகள் உட்பட 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஹரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை என அந்த மாநில அரசு விளம்பரப்படுத்தியது. இந்த வேலையானது, ஒப்பந்த அடிப்படையிலானது; சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய். இதற்கு 4 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியை பார்த்த அதிகாரிகள் மலைத்துப் போயினர். எழுதப்படிக்க தெரிந்தால் மட்டுமே போதுமான இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 6 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 40 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகள் உள்ளனர். பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்தோரும் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர்.

விண்ணப்பம்

இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பொது இடங்கள், சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். விளம்பரத்தில் மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் என்பது குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருந்தும் இத்தனை பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

'மக்கள் தவறுதலாக வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தூய்மை பணியாளர் வேலை என தெரிந்தும் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி இதுவரை துவங்கவில்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர்.'எப்படியோ வேலையில் சேர்ந்து விட்டால் போதும்; அதற்கு பிறகு கல்வித்தகுதியை காரணம் காட்டி ஏதோ ஒரு எழுதும் வேலைக்கு நகர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் பலரும் விண்ணப்பித்துள்ளனர்' என்கின்றனர், அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

T.sthivinayagam
செப் 04, 2024 22:17

சமஸ்கிருதம் படித்தாலாவது கோவில் வேலைக்கு போகலாம் ஆனால் அதற்கும் சிலர் விடமாட்டார்கள் என் ஹிந்துக்கள் வேதனை படுகினலறனர்


Pettai ramasamy
செப் 04, 2024 21:49

கல்வியின் தரம் சரியில்லை அதனால் தான் பெரிய படிப்பு படித்தவர்களும் இது மாதிரியான வேலைக்கு விண்ணபிக்கிறார்கள்


அப்புபண்டிட்
செப் 04, 2024 20:35

படிப்புதான் வெற்றிக்கு வழி. நல்லா படிச்சுட்டு கூட்டி, பெருக்குங்க. அம்ரித்கால் ஹை. ஹரியானாவில் பா.ஜ ஆட்சி ஹை. டபுள் இஞ்சின் சர்க்கார் ஹை. அல்லோருக்கும் வேலை ஹை.


Ramesh Sargam
செப் 04, 2024 19:33

நிலைமை ஒரு பக்கம் இப்படி இருக்கையில், பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்காதவர்கள், வாரிசு அடிப்படையில் ஆட்சி பீடத்தில். போலி சான்றிதழ் காண்பித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?


இளந்திரையன் வேலந்தாவளம்
செப் 04, 2024 17:07

நோகாமல் நோம்பி கும்பிடணும்... சோம்பேறிகளின் முதல் choice gvt job


Palanisamy Sekar
செப் 04, 2024 15:49

சிங்கப்பூரில் இன்ஜினியரிங் பட்டம் படித்தவர்களில் நிறைய பேர் கட்டிடவேலையில் இருக்கின்றார்கள். சென்னையிலிருந்து படித்த பட்டதாரிகள் பலரும் இதுபோன்ற வேலையை கேட்கின்றரக்ள். காரணம் மொழி பிரச்சினை. ஆங்கிலத்தில் சரளமாக அல்ல அடிபப்டையில் கூட பேச தயங்குகின்றார்கள். தெரியவில்லை. அங்கே வெறும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரைதான் சம்பளம் தருவதாக சொல்கின்றார்கள். இங்கே அதே கிளீனர் வேலைக்கு குறைந்தபட்சம் எழுபதாயிரம் கிடைபப்தால் வேலைக்கு வர தயாராக உள்ளனர். வேலைவாய்ப்பே இல்லாத தமிழகத்தில் இதுபோன்ற கொடுமைகள் திராவிட மாடல் கொடுமை சாதனை


சமூக நல விரும்பி
செப் 04, 2024 15:39

அது உண்மை தான்


ஆரூர் ரங்
செப் 04, 2024 15:01

நம் மாநிலத்தில் கால்நடை உதவியாளர் ( மாட்டைக் கட்டுதல். குளிப்பாட்டி வைத்தல், தீவனம் கொடுக்க) பதவிக்கே முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். காரணம் கல்வியின் தரம். எந்த வேலைக்கும் பயனற்ற ஏட்டுக் கல்வி. மிகவும் முன்னேறிய மாநிலம்.