மேலும் செய்திகள்
கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் கண்டனம்
9 hour(s) ago | 1
கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
10 hour(s) ago | 11
மும்பை: 'நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் அரசின் பட்டங்கள் இல்லை. அந்த விருதுகளை பெறுவோர், அவற்றை தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் பயன் படுத்தக்கூடாது' என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த வர்களுக்கு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவும் ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்நிலையில், பத்ம ஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சரத் ஹார்டிகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'பத்ம ஸ்ரீ டாக்டர் சரத் ஹார்டிகர் மற்றும் பிற மனுதாரர்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை, தனி நீதிபதி சோமசேகர் சுந்தரேசன் விசாரித்தார். அப்போது, மனுவில் பெயரை கவனித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு ஆவணங்களில், பெயருக்கு முன் 'பத்ம ஸ்ரீ' என பயன்படுத்தப்பட்டிருப்பதை சட்டரீதியாக அனுமதிக்க முடியாது. நீதிமன்ற நடவடிக்கைகளில் இதை பின்பற்றக் கூடாது. இது தொடர்பாக 1995ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'பத்ம விருதுகள் மற்றும் பாரத ரத்னா போன்ற தேசிய விருதுகள் அரசின் பட்டங்கள் இல்லை. எனவே, அவற்றை பெயருக்கு முன் அல்லது பின் பயன்படுத்தக் கூடாது' என தெளிவாக கூறியுள்ளது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
9 hour(s) ago | 1
10 hour(s) ago | 11