உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் 3 ஆண்டுகள் முன்பே பதுங்கிய பஹல்காம் பயங்கரவாதிகள்: வெளியான புதிய தகவல்

இந்தியாவில் 3 ஆண்டுகள் முன்பே பதுங்கிய பஹல்காம் பயங்கரவாதிகள்: வெளியான புதிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி தந்தது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள டாச்சிகாமில் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வரும் நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 ஆண்டுகள் முன்பு பாக்.கில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்ற புதிய தகவலை ராணுவ அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.இது குறித்து அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது: சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சுலேமான், ஹம்சா ஆப்கனி மற்றும் ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஆவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர். கடந்தாண்டில் அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சுலேமான் தலைமையிலும், மூசா என்ற மற்றொரு பயங்கரவாதி தலைமையிலும் இயங்கி உள்ளனர்.அதற்கு பின்னர், புதியதாக ஊடுருவிய மற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுலேமானுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். பின்னர் ஸ்ரீநகரில் இருந்து 20 கிமீ தொலைவில் டாச்சிகாம் பகுதியில் தலைமறைவாக இருந்திருக்கின்றனர்.பஹல்காம் தாக்குதல் அரங்கேறும் வரை அவர்கள் அங்கேயே பதுங்கி உள்ளனர். அனைவரும் அதி நவீன உயர் அலைவரிசை கொண்ட வயர்லெஸ் கருவிகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அப்பாவி
ஜூலை 30, 2025 16:18

மூணு வருசம்தானா? நேரு காலத்திலேயே ஊடுருவிட்டாங்கன்னு சொல்லிட்டா நம்பிடுவோமே.


Suppan
ஜூலை 30, 2025 16:01

ரமேசு ஐயா அந்த திவீரவாதிகள் பாகிஸ்தானியர் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என்று நம்ம பசி செட்டியார் கேட்டபொழுதே உங்களுக்கு தெரியவில்லையா காங்கிரஸ்காரன் உடந்தை என்று .


என்னத்த சொல்ல
ஜூலை 30, 2025 11:52

இன்னும் எவ்வளவு பேர் இருக்காங்களோ...? பாதுகாப்பு மற்றும் உளவு துறை தோல்வினு பிஜேபி ஒத்து கொள்ளாது..


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 12:27

உள்ளூர் மதத் தலைவர்கள் அடைக்கலம் கொடுப்பது நிற்கும் வரை பயங்கரவாதம் இருக்கும். ஒரு பிரிவினைவாத ஆளே எம்பி யாக உள்ளான். சிறுபான்மை வாக்குவங்கிக்காக இந்த தலைவர்களின் கால்களில் விழும் கட்சிகளே வில்லன்கள்.


Mohan
ஜூலை 30, 2025 13:52

அட மட சாம்பிராணி ...இதுவே காங்கிரஸ் ஆட்சியில் 8000 பேர் செத்திருக்காங்க இதை பாராளுமன்றத்தில் பதிவு பண்ணி இருகாங்க நேற்று ...அப்போ எங்க போனே ...


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 30, 2025 11:08

அவர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஓட்டர் ஐடி பார்சல்


Rathna
ஜூலை 30, 2025 11:04

காஷ்மீர் மலைகளில் உள்ள அடர்த்தியான காடுகளில் 3 அடிக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது. அந்த அளவு மலையின் உயரம் மற்றும் பனிமூட்டம் ஆகியவை மனித வாழ்வுக்கு ஏற்ற இடம் அல்ல. ஆனால் பாக்கிஸ்தான், காஷ்மீரில் உற்பத்தியாகும் நதிகளை கைப்பற்ற இந்தியாவிற்கு மூளை சலவை செய்யப்பட்ட மூர்க்கங்களை அனுப்புகிறது. எவ்வளவு மூளை சலவை செய்யப்பட்டு இருந்தால் அப்படிபட்ட பகுதியில் இவர்கள் வாழுகிறார்கள்?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 30, 2025 11:00

ஆக மதுப்பிரியர் வயநாடு எம் பி உளவுத்துறையின் தோல்வி என்று சொன்னது சரிதானா >>>>


M Ramachandran
ஜூலை 30, 2025 11:59

வயநாடு MP அம்பியில்லை அம்மணி. அவர்களுக்கு அவர்கள் குடும்ப பாசம் நம் ஸ் டாலின் ஐயா போல. இரு குடும்ப பிணைப்பும் ஒன்று போல. அங்கு 1000 கோடி பெரிய அமௌன்ட். இங்கு பிசாத்து அமௌன்ட். அது மத்தியிலாட்டம் பாராளுமன்றத்தில் ஆட்டம் போடும் கும்பல். இது இங்கு தமிழ்நாடு இருக்கும் இடத்தை படத்தில் கரையான் போல் பொத்தல் போடும் முயற்சியை மேல் கொண்டிருக்கு. பிறகு நெல்லூர்ஒங்கோலுக்கு போகாது. பறந்து அயல்நாட்டிற்கு சென்று விடும்.


PERUMAL C
ஜூலை 30, 2025 10:30

ஆமென் மூட கூட்டமே


Apposthalan samlin
ஜூலை 30, 2025 10:04

அல்லி விடுவதில் பிஜேபி யே அடிக்க முடியாது .இதையும் ஒரு கூட்டம் நம்பும்


Anand
ஜூலை 30, 2025 11:00

ஆமென்.


Arunkumar,Ramnad
ஜூலை 30, 2025 11:11

அப்பத்துக்கு மதம் மாற்றும் உன் கூட்டத்தை விடவா வேறு யாரும் அள்ளிவிட முடியும்? வண்டானுக வேலை மெனக்கெட்டு காலங்காத்தால...


babu
ஜூலை 30, 2025 10:00

3 ஆண்டுகளுக்கு முன் நேரு பிரதமராக இருந்தார்


vivek
ஜூலை 30, 2025 11:36

இல்லை பாபு 75 ஆண்டு காங்கிரசன் சதிவேலை


M Ramachandran
ஜூலை 30, 2025 11:47

நேரு நம் தமிழ்நாட்டின் மாநில நமைச்சராக சுரண்டி பொழுது போக்கி கொண்டு இருக்கிறார்


ராமகிருஷ்ணன்
ஜூலை 30, 2025 09:58

இந்த 3 பேரையும் பாக்கிஸ்தானில் இருந்து வரவழைத்து ஆயுத பயிற்சி கொடுத்து, அதி நவீன தொலை தொடர்பு சாதனங்களை கொடுத்து, தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொடுத்து உள்ளது காங்கிரஸ்காரர்கள் தான் என்று தெளிவாக தெரிகிறது


ramesh
ஜூலை 30, 2025 10:30

காங்கிரஸ் திட்டம் போட்டு கொடுத்தது என்று தாங்கள் தெளிவாக தெரிகிறது என்று சொல்லுவதை பார்த்தால் தாங்கள் தான் உடன் இருந்தவர்போல் பேசுகிறீர்கள்


ramesh
ஜூலை 30, 2025 10:33

கடந்த 12ஆண்டுகளாக இந்தியாவில் பிஜேபி ஆட்சி தான் நடக்கிறது ராமகிருஷ்ணன் . தங்களுக்கு ஏதாவது ஞாபக மறதி இருக்கிறதா


Nagendran,Erode
ஜூலை 30, 2025 11:13

இவர் பெரிய துப்பறியும் புலி கண்டுபிடிச்சிட்டாராம் ஏலே போய் பொழப்ப பாருங்கலே..


ராமகிருஷ்ணன்
ஜூலை 30, 2025 11:19

ராவுலும் சிதம்பரமும் பேசும் போது எங்களுக்கும் இப்படி தான் இருந்தது.


vivek
ஜூலை 30, 2025 11:38

கடந்த 12 ஆண்டுகளாக காங்கிரசும் தான் இருக்கிறது. ...அதன் சதி வேலையாக இருக்குமே .


ராமகிருஷ்ணன்
ஜூலை 30, 2025 12:32

காங்கிரஸ் பாக்கிஸ்தான் ஆதரவு நிலை எடுக்க மிக முக்கியமான காரணம். இந்தியாவில் மத கலவரம் உண்டாக்கி அதன் மூலம் தன் ஓட்டு வங்கி உயர வழி செய்கிறது. ஆனால் தற்போது முஸ்லிம்கள் ராவுலை புரிந்து கொண்டு விட்டார்கள். காங்கிரஸின் மொள்ளமாறிதனம் பலிக்காது. தமிழகத்தில் விரைவில் விடியலுக்கும் சிறுபான்மை ஓட்டு சிதறி விடும். TVK அதை செய்யும்.


சமீபத்திய செய்தி