உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 26 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 26 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பேரதிரிச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை நடத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=prk6zvls&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக, காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Keshavan.J
ஏப் 23, 2025 16:08

எங்க தமிழ் நாட்டுலே கள்ள சாராயம் குடித்து செத்தால் 10 லக்ஷம் கிடைக்கும். இது என்ன ஜுஜுபி அமௌன்ட்


veeramani hariharan
ஏப் 23, 2025 13:04

Let the Govt of Kashmir to allot free plot to the next kin of deceased family in Kashmir


Ramesh Sargam
ஏப் 23, 2025 12:04

நிவாரணம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பாக்கிஸ்தான் மீது ஒரு தாக்குதல்தான் அந்த நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் கருதுகிறார்கள். மக்களின் கருத்துக்கு மத்திய அரசு செவிமடுக்குமா? இல்லை வெறும் கண்டனம் தெரிவித்துவிட்டு அவரவர் வேளையில் ஐக்கியமாகிவிடுவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை