மனைவியுடன் குடும்ப தகராறு ஓவியர் துாக்கிட்டு தற்கொலை
ஷாபாத் டெய்ரி: வடமேற்கு டில்லியின் ஷாபாத் டெய்ரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஓவியர் ஒருவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷாபாத் டெய்ரியில் உள்ள அவரது வீட்டில் 28 வயது நபர் ஒருவர் இறந்துகிடப்பதாக புதன்கிழமை காலை 8: 51 மணிக்கு போலீசாருக்கு அவரது தாய் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துாக்கில் தொங்கிய ரவி, 28, என்பவர் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர்.விசாரணையில் மனைவியுடன் ஓவியர் ரவிக்கு மன வருத்தம் இருந்துள்ளது. இருவரும் அவ்வப்போது சண்டை போட்டுள்ளனர்.அவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை போலீசார் உறுதி செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.