உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., - வங்கதேச ஹிந்துக்கள் நம் நாட்டில் வாழ உரிமை உள்ளது!: வரலாற்று பிழையை திருத்தவே குடியுரிமை சட்டம்:  அமித் ஷா திட்டவட்டம்

பாக்., - வங்கதேச ஹிந்துக்கள் நம் நாட்டில் வாழ உரிமை உள்ளது!: வரலாற்று பிழையை திருத்தவே குடியுரிமை சட்டம்:  அமித் ஷா திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''தேசப் பிரிவினையின்போது ஏற்பட்ட வரலாற்று பிழையை திருத்தவே, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் ஹிந்துக்களுக்கு இந்திய மண்ணின் மீது முழு உரிமை இருக்கிறது. அங்கிருந்து ஊடுருவி வந்தவர்களால் நம் நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து விட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, 'ஜாக்ரன் சாஹித்ய ஸ்ரீஜன் சம்மான்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v7ow5i2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த, 1951 முதல், 2011 வரை எடுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததில், குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. கடந்த, 1951ல் நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், ஹிந்துக்களின் எண்ணிக்கை, 84 சதவீதமாக இருந்தது. அதுவே, 2011ல் கணிசமாக சரிந்து, 79 சதவீதமாக பதிவாகி இருக்கிறது. ஊடுருவல் அப்போது, 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை, இப்போது, 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, 2011 புள்ளி விபரங்களின்படி முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம், 24.6 சதவீதம் உயர்ந்துஉள்ளது. ஆனால், இது இயற்கையான உயர்வு அல்ல. அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களால் ஏற்பட்ட திடீர் உயர்வு. வங்கதேசத்தின் எல்லை யில் உள்ள நம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம், 40 சதவீதம் என்ற ரீதியில் இருக்கிறது. சில நேரங்களில், 70 சதவீத அளவுக்கு கூட உயர்ந்து இருக்கிறது. அளவுக்கு அதிகமான ஊடுருவலே இதற்கு காரணம் என்பதை யாராலும் நிச்சயம் மறுக்க முடியாது. மத ரீதியாக, 1947ல் தேசம் துண்டாடப்பட்ட போது, புதிதாக உருவான முஸ்லிம் நாடுகளுக்கு சென்ற ஹிந்து, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு நம் நாட்டிற்கு இருக்கிறது. முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மையின மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இன்றும் ஆளாகி வருகின்றனர். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. 1951ல் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் மக்கள் தொகை, 13 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போதோ 2 சதவீதம் கூட இல்லை. வங்கதேசத்திலும், 22 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக ஹிந்துக்களின் மக்கள் தொகை சரிந்து விட்டது. உரிமை எனவே, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்களுக்கு இன்றும் நம் மண்ணில், அதே உரிமை இருக்கிறது. தேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட வரலாற்று பிழையை திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்டை நாடுகளில் சிறுபான்மையின மக்களாக வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நம் நாட்டின் குடியுரிமை வழங்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தர்மசத்திரம் பொருளாதாரம் மற்ற பிற காரணங்களுக்காக நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. ஏனெனில், அனைவருக்கும் இடம் தர இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல. தேசிய பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. எனவே, சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு இனி இடம் இல்லை. அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்தும் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Subash BV
அக் 14, 2025 10:46

HES RIGHT. GIFTS FROM RAHUL KHAN INDI GROUP PARTY. BHARATHIES BE ALERT.


Subash BV
அக் 13, 2025 17:45

Hindus are getting converted rapidly in pakistan and Bangladesh. Thats why our population reduced there. Muslims from these countries infiltrating in Bharat with the support of Indi group, and further most of the Indian Muslims dont control their population. Reason why indian muslims population raising. Hindus have to be alert and raise their population in line with these guys. Else Bharat will become an islamic nation. BHARATHIES BE ALERT. PUT THE BHARAT FIRST.


Nasrullah P
அக் 13, 2025 06:35

அமித் ஷ் யு ஆர் தி ஹோமோ மினிஸ்டர் போர் தி பாஸ்ட் 12 எஅர்ஸ் Borders are under your control. Why you are not able to control the borders. How Other countries national are entering in India. You are responsible for this.


அப்பாவி
அக் 12, 2025 12:27

வாங்கோ வாங்கோ. வந்து 146 கோடியோடு சேர்ந்து 150 கோடியா கஷ்டப் படலாம்.


Sheik Mohammed
அக் 12, 2025 11:44

This fellow also does not belong to our country. How the surname of shah has come. That is not a Indian name.


Venugopal S
அக் 12, 2025 10:58

இலங்கையில் வாழும் ஹிந்துக்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா? அவர்கள் தமிழர்கள் என்பது தான் காரணமா?


RAMAKRISHNAN NATESAN
அக் 12, 2025 08:54

மொதல்ல நாட்ல இருக்குற வெளியேத்திட்டு அப்புறம் பேசுங்க ......


Rathna
அக் 12, 2025 11:21

ஒத்துழைப்பு தருவதில்லை. இந்தியாவில் உள்ளே வரும் ஊடுருவல் 90% வங்க மாநிலத்தில் இருந்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு சாய பட்டரைகள், பிரியாணி கடைகள், ரெடிமேட் பாக்டரிகளில் அவனுக அதிகம். பெண்களை வைத்து தொழில் செய்வது நடக்கிறது.


KOVAIKARAN
அக் 12, 2025 08:16

திரு மாணிக் அவர்களின் கருத்தான, பாரத அன்னையின் பிரிவினையின் போது நடந்த கொடுமைகள் பொதுவாக தமிழக மக்களுக்கு ஆழமாக தெரியாது. அதுவும் திரிந்த திராவிட வரலாறு படித்த பல தலைமுறை அதை மறந்தேவிட்டனர். இது சத்தியமான உண்மை. அமித்ஷா சொன்னது போல, ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட, CAA - குடியுரிமை திருத்தச் சட்டம் உடனே அமலுக்கு வரவேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு S.I.R. சட்டவிரோதமாக நமது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை, குறிப்பாக பங்களாதேஷ், மற்றும் ரோஹின்யாக்களை கண்டறிந்து நம் நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும். இவைகள் அனைத்தும் விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.


சந்திரன்
அக் 12, 2025 06:49

ஏன் பங்களாதேஷ் முஸ்லிம்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வர வேண்டும். தனி நாடு வேணும்னு கேட்டு போன அவர்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சந்தோஷமாக சுதந்திரமாக வாழ்ந்தாலும் பாகிஸ்தான் நினைப்போடவே வாழறானுங்க.


Venkatesan Srinivasan
அக் 12, 2025 12:27

பாகிஸ்தான் பிரிந்து போனதே முஸ்லிம்கள் தங்களை இந்துக்கள் பெருவாரியான பாரதத்தில் தங்களை வைத்துக்கொள்ள காரணம் விரும்பாதது. பாகிஸ்தான் மேற்கு மற்றும் கிழக்கு என்று வட இந்தியாவில் இந்தி உருது பேசும் மற்றும் கிழக்கு இந்தியாவில் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் ஆண்ட இந்திய அரசாலும் கை கழுவி விடப்பட்டது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு சிந்தாமல் சிதறாமல் ஓட்டு தேவை.


Krishna
அக் 12, 2025 06:44

Instead of CAA, CLAIM 25% AfPakBangla for india & Accommodating their Minorities Hindus etc 1947year Level While Chasing Out All Muslims toAfPakBangla Created for them by Traitors BritishCongress MuslimLeague. Sack& Punish Modi for Regularising Billions of Foreign Infiltrators With MidiMental Aadhar SpyMaster


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை