உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை ஆதரிக்கும் பாக்., அரசு: பிரதமர் மோடி சாடல்

காங்கிரசை ஆதரிக்கும் பாக்., அரசு: பிரதமர் மோடி சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்வால்: '' காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் அரசு ஆதரித்து வருகிறது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 'நகர்ப்புற நக்சலிசம்' தான் காங்கிரசின் ஒரே திட்டம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என அக்கட்சி சொல்கிறது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை மீட்பது குறித்து அக்கட்சி எதுவும் சொல்லவில்லை. இது அக்கட்சியின் வாயில் இருந்து வராது. காஷ்மீரை கூறுபோட்டது காங்கிரஸ் கட்சி தான். இக்கட்சியை தான் பாகிஸ்தான் அரசு ஆதரித்து வருகிறது. மிகவும் ஏமாற்றுக்கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்.இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதற்கு ஒரு சோதனை களமாக ஹரியானாவை பயன்படுத்த அக்கட்சி திட்டமிடுகிறது. மோடியும், பா.ஜ.,வும் இருக்கும் வரை அது நிறைவேறாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lion Drsekar
அக் 02, 2024 13:37

சுதந்திரம் பெற்றத்துக்கோடுக தியாகிகளின் பெயர்கள் எங்குமே வராமல் , அவர்கள் வாரிசுகளும் எங்குமே வராமல் , எல்லாமே தாங்கள்தான் என்று மூன்று தனி நபர்கள் இனி எல்லாமே இவர்கள் குடும்ப சொத்து என்று அவர்களுக்குள் பிரித்துக்கொண்டதுதான் இந்த வரைபடத்தில் இருக்கும் கோடுகளின் எல்லை, அப்படி இருக்க எளிமை, நேர்மை, இறையாண்மை, இவைகள் எதுவுமே இங்கு எடுபடாது, மேலும் கடந்த 70 ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்த , இவர்கள் மற்றும் இவர்கள் சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள் அனைத்துமே யாருக்கு சாதகமாக இருக்கும், என்னதான் சாடினாலும் அவர்கள் அவர்கள்தான்,


aaruthirumalai
அக் 02, 2024 11:44

அப்புறமென்ன மூர்க்கமான தேசத்தோட பொருளாதாரம் ஆடி போயிருச்சே.


pmsamy
அக் 02, 2024 07:13

????


Kasimani Baskaran
அக் 02, 2024 05:40

தேசவிரோத காங்கிரஸ் கட்சியை தடை செய்யாமல் விட்டு வைத்திருப்பதன் நோக்கம் புரியவில்லை.


சிவம்
அக் 01, 2024 21:54

பாம்பிஸ்தான் காங்கிரஸ் கட்சியுடன் கூடடணி வைக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம் மோடிஜி. 2014 முன்பே நல்ல நோட்டு அடிக்கிற மெஷினை கள்ள நோட்டு அடிக்க அந்த நாட்டுக்கு விற்றுவிட்டார் இங்குள்ள ஒரு பிரகஸ்பதி. கொலைகாரன் உடன் கொள்ளைக்காரன் கூட்டு.


nagendhiran
அக் 01, 2024 20:36

ரொம்ப பழைய செய்தி?


Nandakumar Naidu.
அக் 01, 2024 20:34

தேச விரோத,சமூக விரோத,ஹிந்து விரோத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் ஹிந்துக்களுக்கு புரிந்தால் சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை