மேலும் செய்திகள்
பயங்கரவாதியுடன் தொடர்பு பீதர் இளைஞர் கைது
04-Oct-2026
பரிதாபாத்: பஞ்சாபில் கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் தேடப்பட்டவர், இன்று (அக்.,29) கைது செய்யப்பட்டார். பஞ்சாப்மாநிலம் பசில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாதில், செப்., 13 ம் தேதி, கையெறி குண்டு வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் குல்வந்த் சிங் என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து, குல்வந்த் சிங்கின் பின்னணி குறித்து உளவுத்துறையினரும் விசாரித்தனர். இதில், பாகிஸ்தானில் இருந்து இயங்கும், ‘ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்’ என்ற பயங்கரவாத குழுவுடன், குல்வந்த் சிங்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழுவினர், நம் நாட்டில் கையெறி குண்டுகள், ஐ.இ.டி., வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள். குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து, அவர்களை தீர்த்துக்கட்டும் செயலிலும் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில், பஞ்சாப், பெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிங், பஞ்சாயதி ஜூகி என்ற இடத்தில், தன் அத்தையின் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் பரிதாபாத் போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில், குல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார். அவரை, தனியிடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில, ஸ்ரீகங்கா நகரில் 8 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிபொருள் சிக்கிய சம்பவத்திலும், குல்வந்த் சிங்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
04-Oct-2026