உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஏவுகணை காஷ்மீரில் கண்டெடுப்பு

பாக்., ஏவுகணை காஷ்மீரில் கண்டெடுப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலை நடத்தியது. மே 7 அதிகாலை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் ராணுவம் மற்றும் விமானப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. இதையடுத்து, நம் எல்லையோர மாநிலங்களில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி சீறிப் பாய்ந்த ஏவுகணைகளை நம் படைகள் வானிலேயே அழித்தன. அவ்வாறு, ஜம்மு - காஷ்மீரை நோக்கி வந்த ஏவுகணை ஒன்றை, நம் வீரர்கள் தடுத்தனர். இது, ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. மே 10ம் தேதி அதிகாலை விழுந்த ஏவுகணையால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. ஏரியின் ஆழத்தில் சிக்கியிருந்த ஏவுகணை உடைந்ததை அடுத்து, அதன் பாகங்கள் நேற்று மீட்கப்பட்டன. உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் மீட்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் நம் விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை