உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு

பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வான்வெளியை பயன்பாட்டுக்கு பாகிஸ்தான் தடை விதித்ததை அடுத்து நிலைமையை மதிப்பிட்டும், விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். விரைவில் தீர்வு காண்போம்,' என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.கடந்த ஏப்.22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாககுதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் கடந்த வாரம் இந்திய விமான நிறுவனங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. இந்நிலையில் டில்லியில் நடைபெற்ற ஏ.ஐ., பொறியியல் சேவைகள் லிமிடெட் ஏற்பாடு செய்த ' ஏவியேஷன் ஹாரிசன் 2025' மாநாட்டில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கலந்து கொண்டார்.இதனிடையே வான்வெளி மூடல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:'நாங்கள் நிலைமையை மதிப்பிட்டு வருகிறோம், மேலும் விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்' வான்வெளி மூடலால்,வட இந்திய நகரங்களில் இருந்து பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு, நீண்ட துாரம் பறக்கும் நேரத்தை ஏற்படுத்துகிறது, மேலும் விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்கிறது.வான்வெளி நீண்ட காலத்திற்கு மூடப்படுமானால், அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மதிப்பீடுகளை ஆராயுமாறு விமான நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். முழுமையான புரிதலுக்குப் பிறகுதான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்.வான்வெளி தடைகளைத் தொடர்ந்து சர்வதேச விமானங்களுக்கான விமானக் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் வழிகாட்டுதல்களை வெளியிட ஏதேனும் தற்காலிக திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து, பேசிய அவர்,அனைத்து அம்சங்களையும் பரிசீலிப்போம்.இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஏப் 28, 2025 20:16

பாகிஸ்தானின் அழிவுகாலம் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட பல உலக நாடுகள் தாமாகவே விருப்பம் காட்டுகின்றன. கூடிய சீக்கிரம் ஒரு புதிய உலக வரை படம், அதில் பாகிஸ்தான் இருக்காது.


TRE
ஏப் 28, 2025 18:14

பாக்., கால்களை பிடித்து வான்வெளி மூடலை திறக்க வைப்போம் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 28, 2025 18:39

பாக் கால்கள் TKR செய்யப்பட்ட வலுவிழந்த கால்கள் ஊன்று கோல் உடன் தான் நடந்து கொண்டு உள்ளது. ராம் மோகன் நாயுடுக்கு இந்த அவசியம் வராது. பாக் தனது கால்களை இழந்து வீல் சேரில் கூட செல்லமுடியாமல் போகலாம். எதற்கும் ஆபரேஷன் தியேட்டர் ரெடியா வைத்து கொள்வது பாக் நல்லது. பாக் முக்கிய புள்ளிகள் குடும்பத்தினர் ஊரை காலி செய்வதாக செய்தி வந்தது கால்களை ரிப்பேர் செய்ய போயிருப்பார்களோ.


Bhakt
ஏப் 28, 2025 22:37

இவன் ஒரு அமைதி மிருகமா இருக்கணும் இல்லை The Vidiyal Son ஆக இருக்கணும்


naranam
ஏப் 28, 2025 17:56

விமானப் பயணக்‌ கட்டணம் சற்று அதிகமானால்‌ மக்கள் அதைப்‌ பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பாக்கிஸ்தானிடம் கெஞ்சக்‌ கூடாது.‌


முக்கிய வீடியோ