உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் நடத்த பாக்., மீண்டும் முயற்சி: வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா

தாக்குதல் நடத்த பாக்., மீண்டும் முயற்சி: வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா

ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. தற்கொலை ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பாகிஸ்தானின் டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் பதிலடி கொடுக்க போவதாக கூறியது. நேற்று 15 இந்திய நகரங்களை நோக்கி பாக்., ராணுவம் வீசிய ஏவுகணைகளை நமது ராணுவம் இடைமறித்து அழித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=393yn8qw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று இரவு பாகிஸ்தான் ராணுவம் தற்கொலை டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்தது. குறிப்பாக ஜம்மு விமான நிலையம், சுஞ்சுவன் ராணுவ தளம்ல சம்பா தேசிய நெடுஞ்சாலை, ஆர்னியா ராணுவ தளம் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஏர் சைரன் ஒலிக்கவிடப்பட்டது. அக்னூர் பகுதியில் சைரன் சத்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரின் உதம்பூர் மற்றும் அக்னூர் பகுதியிலும் பாகிஸ்தானின் டுரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. உடனடியாக எஸ் 400 மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் பாக்., தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. ஜம்மு.ஆர்எஸ்போரா உள்ளிட்ட 3 இடங்களில் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. ஆறு இடங்களில் வெடிச்சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், இரவு முழுவதும் மின்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

ராஜஸ்தானிலும்

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் பாக்., ராணுவம் டுரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. உடனடியாக இந்திய வான் பாதுகாப்பு கவசம் அதனை வழிமறித்து தாக்கி அழித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.பாஞ்சாபின் ஜலந்தர் பகுதியிலும் பாகிஸ்தான் டுரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

8 ஏவுகணைகள் அழிப்பு

இரவு நேரத்தில் காஷ்மீரின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ்புரா மற்றும் அர்னியா செக்டார் பகுதிகளில் பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 09, 2025 05:52

தீவிரவாதத்துக்கு எதிராகப்போராடும் இந்தியா .... அனைவரும் ஒன்றுபடுவோம் .....


Kasimani Baskaran
மே 09, 2025 03:52

தேசப்பற்று இல்லாத கேடிகளை நாட்டை விட்டு இந்தியா உடனே வெளியேற்ற வேண்டும். இந்திய சமூக ஊடங்கங்களையும் ஹிந்து போன்ற பத்திரிகைகளையும் ஆதாரமாக வைத்து பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சொல்கிறார். அப்பேர்ப்பட்ட கேடி ஊடகங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இராணுவ கோர்ட் மூலம் நிர்மூலமாக்கப்பட வேண்டும். அரசு ஒப்பந்தங்களோ, கட்சிகளோ விளம்பரம் கொடுத்தால் அந்த கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். எதிரிகளை விட துரோகிகள் அழிக்கப்படுவது இந்தியாவின் வருங்காலத்துக்கு நல்லது.


krishna
மே 08, 2025 22:49

WHY DRAVIDA MODEL ATTACK OF CENTRAL GOVERNMENT ALWAYS PL GIVE SHOCKING HIT TO THIS MAFIA ANTI NATIONAL GANG


ramesh
மே 08, 2025 22:42

jaihind


மீனவ நண்பன்
மே 08, 2025 21:48

தற்கொலை ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல். இது புதுசா இருக்கே ...


Jay
மே 08, 2025 21:23

மூவர்ண கொடியில் பெயரை வைத்து தனது தேசப்பற்றை நிரூபித்து விட்டது தினமலர்.


பெரிய ராசு
மே 08, 2025 21:55

வாழ்க தினமலர் தேசபக்தி ஜெய் ஹிந்துஸ்தானம் வாழ்க மோடி


Raman
மே 08, 2025 22:01

Jai Hind


srini
மே 08, 2025 23:48

yes absolutely, hats off Dinamalar Jai Hind


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை