உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடியது பாகிஸ்தான்

சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடியது பாகிஸ்தான்

புதுடில்லி: நம் பாதுகாப்பு படையினர் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில், பாகிஸ்தானில் சேதம் அடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு, அந்நாட்டு அரசு மூடி மறைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவத்தினர் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் தகர்த்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1fetmqrm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுதவிர, அந்நாட்டின் முரித்கே, ஜகோபாபாத், போலாரி உள்ளிட்ட ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் கடும் சேதமடைந்தன. இதை பாகிஸ்தான் மறுத்தது. இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதமான நிலையில், சேதம் அடைந்த விமானப் படை தளங்களை பாக்., ராணுவம் தார்ப்பாய்கள் போட்டு மூடியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 'மேக்ஸார்' என்ற தனியார் நிறுவனம் சார்பில் பாகிஸ்தானில் உள்ள சேதமடைந்த விமானப்படை தளங்களின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.கடந்த மாதம் 10ம் தேதி நம் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரித்கே விமானப்படை தளம் கடும் சேதமடைந்தது. தற்போது, அத்தளத்தின் மீது பச்சை நிற தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதேபோல் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போலாரி விமானப்படை தளமும், நம் பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது. அப்போது சேதமடைந்த பகுதிகள் தெளிவாக தெரிந்த நிலையில், தற்போது, அத்தளத்தின் மீது தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது.மற்றொரு விமானப்படை தளமான ஜகோபாபாதில், இதே நிலை நீடிக்கிறது. கடந்த மாதம் 11ல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், சேதமடைந்த பகுதிகள் தெளிவாக தெரிந்தன; ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் அந்நாட்டு அரசு சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ளன.இதன் வாயிலாக, நம் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை, மறைக்க இத்தகைய ஏற்பாடுகளை பாக்., அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், செயற்கைக் கோள் புகைப்படங்களின் வாயிலாக அதன் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக கூறி, அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, பாகிஸ்தான் அரசு கவுரவித்து வருகிறது.

தாக்குதல்

ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம், கடந்த மாதம் 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஒப்புக்கொண்டன. எனினும், பாகிஸ்தான், நம் நாட்டின் எல்லைப்பகுதிகளை குறிவைத்து தொடர்ந்து 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இவற்றை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கி அழித்து வருகின்றனர். இதன்படி கடந்த மாதம் 14ம் தேதி முதல் இம்மாதம் 8ம் தேதி வரை 24 ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூன் 12, 2025 20:21

தார்பாய்கள் தேவைகளுக்கு பாகிஸ்தான், இந்தியாவை அணுகலாம். இலவசமாக கூட கொடுப்போம். ஏன் என்றால் அதை வாங்க உங்களிடம் ஏது பணம்? உங்களுக்கு தான் சோத்துக்கே வழியில்லையே.


Rangarajan Cv
ஜூன் 12, 2025 11:07

US army chief appreciated the rogue state, as partner to counter terrorism. Joke in geopolitics???


Ramaraj P
ஜூன் 12, 2025 09:05

இன்னும் நிறைய தார்ப்பாய்கள் தேவைப்படும்.


Kasimani Baskaran
ஜூன் 12, 2025 04:06

உலக வங்கி கடன் வாங்கித்தான் தார்ப்பாய் கூட போடமுடிகிறது. ஆண்டவன் புண்ணியத்தில் அமெரிக்காவே எகிப்திய போரானை விமானத்தில் கொண்டு வந்து கொட்டிவிட்டது. இல்லை என்றால் அண்டை நாடுகளுக்கு கதிர்வீச்சு அபாயம் வந்திருக்கும்.


Kasimani Baskaran
ஜூன் 12, 2025 04:04

திராவிட, ஸலாமிய இனைய நிபுணர்களுடன் சேர்ந்து பாகிஸ்தான் இனைய நிபுணர்கள் இனி எளிதில் இந்தியா தாக்குதலே நடத்தவில்லை என்கிற அளவுக்கு முட்டுக்கொடுக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை