உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உளவு பார்க்க ஆள் சேர்த்த பாக்.,: துாதரக சதி அம்பலம்

உளவு பார்க்க ஆள் சேர்த்த பாக்.,: துாதரக சதி அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:டில்லியில் இயங்கி வரும் பாகிஸ்தான் துாதரகம், உளவு பார்க்கும் அமைப்பா க செயல்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் பல்வால் பகுதியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் வாசிம் அக்ரம் என்பவரை கைது செய்ததன் வாயிலாக, பாகிஸ்தான் துாதரகம் இந்திய ராணுவத்தை உளவு பார்க்க ஆட்களை நியமித்த தகவல் அம்பலமாகி இருக்கிற து. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ளன. இதனால், எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்களின் உறவினர்கள் பலர், பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். அவர்களை காண, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திடம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சிலரை, தங்களது உளவுச் செயல்களுக்கு பாகிஸ்தான் துாதரக அதிகாரிகள் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இ தேபோல், கைதான வாசிம் அக்ரமை யும் தங்களது துாண்டிலில் விழ வைத்து, உளவு பார்ப்பதற்கு பாக்., அதிகாரிகள் பயன் படுத்தி இருக்கின்றனர். பாகிஸ்தான் துாதரக அதிகாரி ஜாபருக்கு தரவுகளை தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளில் அக்ரம் ஈ டுபட்டது, நம் உளவுத் துறை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வாசிம் அக்ரம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அம்பலமானதால், டில்லியில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் துாதரக அதிகாரிகள் ஜாபர், டேனிஷ் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். எனினும், புதிதாக அந்த பதவிக்கு வந்த அதிகாரிகளும் பழைய படியே உளவு பார்ப்பதற்கு ஆட்களை சேர்ப்பதற்கான வலை யை விரித்து வருவது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை