உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., துப்பாக்கிச் சூடு; ஜம்மு காஷ்மீரில் முழு மின் தடை

பாக்., துப்பாக்கிச் சூடு; ஜம்மு காஷ்மீரில் முழு மின் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: எல்லையில் பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் முழு மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வந்தாலும், பொதுமக்களை குறிவைத்து பாக்., தாக்குதல் நடத்துவதால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பல நகரங்களிலும், முழு மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச பகுதியில் விடிய விடிய தாக்குதல் நடந்து வருகிறது. ஊடுருவல் முறியடிக்கப்பட்ட சம்பா பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்நிலையில், பாக்., ட்ரோன் தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி