பிற நாடுகளுக்கு உபதேசிக்க பாக்.,கிற்கு உரிமையில்லை
புதுடில்லி: 'பிற நாடுகளுக்கு உபதேசிக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு இல்லை' என, இந்தியா தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் 161 அடி உயர கோபுரத்தில் அமைந்து உ ள்ள 30 அடி உயர கொடிக்கம்பத்தில், காவிக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மு ன்தினம் ஏற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நம் அண்டை நாடான பாக்., முஸ்லிம் பாரம்பரியத்தை அரசு அழிப்பதாக குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து, நம் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''மதவெறி, அடக்குமுறை என, பல்வேறு செயல்பாடுகளுடன் ஆழமான கறை படிந்த நாடு பாகிஸ்தான். ''எனவே, மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் உரிமை அந்நாட்டுக்கு இல்லை. பாசாங்குதனமான போதனைகளை வழங்குவதற்கு பதிலாக, சொந்த பிரச்னையில் கவனம் செலுத்துவது நல்லது,'' என, தெரிவித்துள்ளார்.