உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி

எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ylnljo0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, எல்லை தாண்டியதாக இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால், இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 4வது நாளாக நள்ளிரவில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடததியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஏற்கனவே, இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajah
ஏப் 28, 2025 14:11

உங்கள் தலைவர் குருமா போரை நிறுத்துமாறு கூறிய பின்னரும் ஏன் எல்லை தாண்டி துப்பாக்கிச் சண்டை செய்கிண்றீர்கள்?


ramesh
ஏப் 28, 2025 09:58

தீவிரவாதிகளின் பயங்கரவாதம் நடந்து ஒருவாரம் ஆகிவிட்டது பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவை 130 அணுகுண்டுகளை வைத்து அளித்து விடுவோம் என்று கொக்கரிகிறார். இன்னும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க படாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை


Ramanujan
ஏப் 28, 2025 09:00

அத்து மீறும் பாக் என்று எழுதுவதை நிறுத்தவும். There is no Shimla Agreement anymore. So, there is no ceasefire agreement and no LOC etc. So, Bharat should initiate "அத்து மீறல்" from now on and start bleeding Pak in small cuts, instead of only responding every time. They should also take decisive steps internally against all the so-called peace seekers.