உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூரால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் மறுக்காது: ராஜ்நாத்

ஆப்பரேஷன் சிந்தூரால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் மறுக்காது: ராஜ்நாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் நொறுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட வலியை இன்றும் அந்நாடு மறக்க முடியாது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.டில்லியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: தற்போதைய காலத்தில் எல்லையில் மட்டும் போர்கள் நடக்கவில்லை. அவை சமச்சீரற்ற வடிவத்தை எடுத்துள்ளன. பாரம்பரிய பாதுகாப்பு பார்வை தற்போதைய காலத்துக்கு உதவாது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும், வலுவான ஆயுதப்படைகளை உருவாக்கவும் மத்திய அரசும் பல விதமான தைரியமான மற்றும் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை எடுத்துள்ளது. அதில் சிறப்புமிக்க நடவடிக்கைகளில் ஒன்று, முப்படை தலைமை தளபதி பதவி. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, முப்படைகளின் ஒருங்கிணைந்தும், கூட்டாக செயல்பட்டதை நாம் பார்த்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை நொறுக்கியது.இன்றும் கூட அந்நாடு அந்த வலியை மறக்கவில்லை. சிவில் மற்றும் ராணுவத்தை ஒன்றிணைப்பதை சாதாரண ஒருங்கிணைப்பாக மட்டும் பார்க்கக்கூடாது. இந்த நடவடிக்கை இந்தியாவில் தொடர்ச்சியாக நடக்கிறது. பாதுகாப்புத்துறையில் இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. அதில், தனியார் துறையின் பங்களிப்பு ரூ.33 ஆயிரம் கோடி. இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Iyer
அக் 23, 2025 05:47

பாகிஸ்தானைவிட மிக அதிக வழியும் அதிர்ச்சியும் - சீனாவுக்குத்தான். பாரதத்துக்கு ஈடான MISSILE SYSTEM சீனாவிடம் இல்லை என்பது அப்பட்டமாக வெளியானது. பாரதத்தின் எந்த MISSILE யம் கண்டுபிடித்து நிறுத்தும் சக்தியோ - TECHNOLOGY யோ சீனாவிடம் இல்லை பாரதம் சீனாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்து ஒரே நாளுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சக்திபடைத்தது என்ற உண்மை வெளியானது.


Kasimani Baskaran
அக் 23, 2025 04:15

உடன்பிறப்புக்களின் கதறல் தொடர்கிறது.. இனியாவது வெறுமனே சிராய்ப்பு மட்டும் வருமளவுக்கு அடிக்கக்கூடாது - மொத்தமாக அடித்து நொறுக்க வேண்டும். கொடுக்கும் அடி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எழுந்திரிக்கக்கூடாது.


Senthoora
அக் 23, 2025 05:34

உடன் பிறப்பு கதறல் இல்லை, ஆபரேசன் வெற்றி இல்லை, ஆனால் அடித்துடோம் என்று கதறுவதுபோல இருக்கு, அடித்து நொறுக்கினோமா என்று போய்ட்டே இருக்கனும், 6 மாதமா இதையே புலம்புறாங்க, கார்கில் வார், பங்களாதேஷ் வார் வெற்றியை கூட இப்படி சொல்லி புலம்பவில்லை.


Vasan
அக் 23, 2025 03:25

இது பத்தாது. தினமும் ஒரு வேளை தான் பேசுகிறார். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பேச வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். மேலும் அனைத்து திரையரங்குகளிலும், திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்கு நடுவில் 5 நிமிடம் இந்த பேச்சு திரையிடப்படவேண்டும்.


Senthoora
அக் 23, 2025 05:35

நல்ல முடிவு சொன்னிங்க,


ஜெய்ஹிந்த்புரம்
அக் 23, 2025 01:13

இன்னமும் எவ்வளவு மாதங்கள் இந்த பாட்டையே பாடிக்கொண்டிருப்பீர்கள் அமைச்சரே?


vivek
அக் 23, 2025 05:38

திராவிடம், சமத்துவம் என்று இங்கு உளறி கொண்டு இருக்கும் கிறுக்கர் உன்னை போல பலர் இங்கு உண்டு பொய்ஹிந்து


vivek
அக் 23, 2025 05:39

உனக்கு பின்பக்கம் எறிந்தால் பர்னால் தடவிக்கொள் பொய்ஹிந்து


Iyer
அக் 23, 2025 05:54

OPERATION SINDHOOR - PART II & PART III எல்லாம் நடந்து விட்டன என்று உமக்கு தெரியாதா? பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒவ்வொன்றாக கண்ணில்தெரியாத துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மூலம் சுட்டுத்தள்ளிக்கொண்டுஇருக்கிறோம் . இதுதான் OPERATION SINDHOOR PART II இரண்டுநாள் முன் பங்களாதேஷில் ஒரு NUCLEAR PLANT UNDER CONSTRUCTION ஐ அடித்து நொறுக்கினோம். இதுதான் OPERATION SINDHOOR PART III


Raja k
அக் 22, 2025 23:07

,ஆமா எத்தனை நாளைக்கு இதே பல்லவியை பாடுவீங்க? இந்தியாவுக்கு எத்தனை இழப்பு சொன்னீர்களா? எத்தனை உயிர்கள் போச்சு? எத்தனை வீடுகள், கட்டிடங்கள் சேதம், எத்தனை ட்ரோன்கள், ஏவுகனைகள், விமானங்கள் சேதம் என்பதை வெளிபடையாக சொல்லவில்லையே ஏன்?


Priyan Vadanad
அக் 22, 2025 22:47

இங்கு இவர்கள் இப்படி அடிக்கடி பஜனை செய்துகொண்டிருப்பதால் நம் எவருக்கும் சந்தேகம் வரவில்லை.


Priyan Vadanad
அக் 22, 2025 22:45

அடுத்த தேர்தல் வரைக்கும் இப்படியே பஜனை பாடிக்கொண்டே இருங்கள். ஜெய்சிந்தூர் ஜெய்சிந்தூர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை