உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர் எல்லைப்பபாதுகாப்பு படையினரால் கைது

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர் எல்லைப்பபாதுகாப்பு படையினரால் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த நபர் ராஜஸ்தான் பகுதிக்கு உட்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் உள்ளார். கைது செய்யப்பட்டவரின் அடையாளம் குறித்து பாதுகாப்பு படையினர் எந்த தகவலும் அளிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவின் கடும் கண்டனத்திற்கு பிறகும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய பாதுகாப்புப்படை வீரரை விடுவிக்க மறுத்துள்ளது. இந்திய ராணுவம் அவரை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுகடந்த ஏப்ரல் 22ல் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்த நிலையில் இருநாட்டினைச் சேர்நத ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்திய பாதுகாப்புப்படையினர் ரோந்து பணியின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் எல்லையை கடந்து செல்ல வேண்டாம் என்றும் எல்லைப்பாதுகாப்புப்படை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ