உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த பாகிஸ்தானியர் கைது

பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்த பாகிஸ்தானியர் கைது

பெங்களூரு, போலியாக ஆதார் அட்டை உருவாக்கி, பெங்களூரில் வசித்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த அவரது மனைவி, மாமனார் மற்றும் மாமியாரும் கைது செய்யப்பட்டனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டு இருந்த வழக்கில், பெங்களூரு ஜிகனியில் பதுங்கி இருந்த உல்பா - ஐ என்ற அமைப்பைச் சேர்ந்த கிரிஷ் போரா என்பவரை, என்.ஐ.ஏ., கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்தது.உளவுத்துறை தகவல்இந்நிலையில் ஜிகனி பகுதியில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக வசித்து வருவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.ஜிகனியில் ஒரு வாடகை வீட்டில் நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், குடும்பத்துடன் வசிப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருந்தது.இதுபற்றி ஜிகனி போலீசாருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்திருந்தது. குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவரை, போலீசார் கடந்த சில மாதங்களாக கண்காணித்து வந்தனர்.அந்த வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற போலீசார், நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் ரஷீத் சித்திக், 48, ஆயிஷா அனிப், 38, முகமது ஹனீப், 73, ரூபினா, 61.இவர்களில் ரஷீத் சித்திக், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் ஏற்பட்ட மதப்பிரச்னையால், அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்தின் டாக்காவில் குடியேறினார்.அங்கு வசித்த ஆயிஷாவை திருமணம் செய்தார். முகமது அனீஸ், ரூபினா ஆகியோர் ஆயிஷாவின் பெற்றோர்.இவர்கள் நான்கு பேரும், வங்கதேசத்தில்இருந்து மேற்கு வங்கம் வழியாக டில்லிக்கு, கடந்த 2014ல் வந்தனர். அங்கு ஒருவரின் உதவியுடன் போலி ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமத்தை நான்கு பேரும் பெற்றுள்ளனர். பின், கடந்த 2018ல் பெங்களூரு வந்து ஜிகனியில் குடியேறியது தெரிந்தது.விசாரணைவங்கதேசத்தில் வசித்தபோது, ரஷீத் சித்திக் அடிக்கடி நேபாளத்திற்கு சென்று வந்துள்ளார். அங்கு, 'மெஹ்தி' என்ற அறக்கட்டளையில் சேர்ந்துள்ளார்.அந்த அறக்கட்டளையின் மதகுரு யூனுஸ் என்பவர் கூறியதன் பேரில், ரஷீத் சித்திக் தன் குடும்பத்தினருடன் பெங்களூரு வந்து வசித்ததும் தெரியவந்துள்ளது. ரஷீத் சித்திக் தன் பெயரை சங்கர் சர்மா என்றும்; ஆயிஷா - ஆஷா சர்மா; முகமது ஹனீப் - ராம் பாபா சர்மா; ரூபினா - ராணி சர்மா என மாற்றியதும் தெரிந்தது.மேலும், வீட்டிலேயே பிரியாணி தயாரித்து ஆன்லைனில் நான்கு பேரும் விற்பனை செய்ததும் தெரிந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி