உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பாக்., உளவாளி கைது

இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பாக்., உளவாளி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,க்காக உளவு பார்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.உ.பி.,யின் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மல்டி டாஸ்கிங் பிரிவு அதிகாரியாக இருந்து வருகிறார். இவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்காக உளவு பார்த்ததாக உ.பி., பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சத்யேந்திர சிவலை கைது செய்து விசாரணை நடத்தினர். முதலில் உளவு அமைப்புடன் உள்ள தொடர்பை மறுத்துள்ளார். பிறகு, ஆதாரங்களை வைத்து போலீசார் துருவித்துருவி விசாரணை செய்ததில், சத்யேந்திர சிவல் உண்மையை ஒப்புக் கொண்டார்.தூதரகத்தில் பணியாற்றிய காலத்தில், இந்தியா குறித்த ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு கொடுத்ததும், இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகள், அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பெற்றும், இந்திய தூதரகம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Baskaran
பிப் 04, 2024 21:16

இவனுங்களை உடனே தூக்கில் போடணும்.


Sankar Ramu
பிப் 04, 2024 18:46

அங்கேயும் திராவிடன் இருக்கான். ????????


வேற்றுமையில் ஒற்றுமை
பிப் 09, 2024 06:15

சங்கரு, Embassyல வேலை செய்யணும்னா BJP RSSல இருக்கணுமாம்.


vnatarajan
பிப் 04, 2024 17:04

லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிகளை கைது செய்தார்களா இல்லையா /


venugopal s
பிப் 04, 2024 15:51

வட இந்தியர்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள் என்பார்களே!


Dharmavaan
பிப் 04, 2024 17:39

எதோ சில களைகள் இப்படி பிடுங்கி எறிகிறார்கள்


beindian
பிப் 04, 2024 15:36

இப்போதாவது தெரிந்து கொள்ளுங்க நாட்டை காட்டி கொடுப்பதும் துரோகம் செய்வதும் இந்த பயலுக என்னவேனாலும் செய்வானுங்க


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 04, 2024 15:06

"இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து..." அப்போ சிஸ்டத்தில் இன்னும் சில கரையான்கள் உள்ளது என்று தெரிகிறது. ஆவன செய்யவும்.


பேசும் தமிழன்
பிப் 04, 2024 14:56

பயபுள்ள ...இங்கே நாம் நாட்டின் உப்பை தின்று விட்டு ....எதிரி நாட்டுக்கு வேலை பார்த்து இருக்கிறான்......பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.


Ganapathy
பிப் 04, 2024 12:56

தேசத்துரோகிகள் காந்தியின் பேரில் இருந்தாலும் நேருவின் பெயரில் இருந்தாலும் திராவிட பெயரில் இருந்தாலும் கழுவேற்றப்பட்ட வேண்டும். அப்பத்தான் நாடு உருப்படும்.


Bahurudeen Ali Ahamed
பிப் 04, 2024 18:58

தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் கழுவேற்றப்படவேண்டும் என்றால் நியாயம். அது என்ன காந்தி, நேரு பெயர். உங்களுக்கு தேசத்திற்கு பாடுபட்ட காந்தியும் நேருவும் தேசத்துரோகிகளாக தெரிகிறார்களா, என்ன மாதிரியான மனநிலை. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மேனகா காந்தி, வருண் காந்தியை என்ன செய்வது


Karthikeyan
பிப் 04, 2024 12:50

தேர்தல் வந்துட்டாலே எங்கிருந்துதான் இந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லாம் வருவானுகண்ணே தெரியல.. எலெக்சன் தேதி அறிவிச்சுட்டா இன்னும் அதிகமா படையெடுப்பானுக..


Thiruvenkadam
பிப் 04, 2024 16:19

மற்றொரு பக்கம் ஓட்டு இயந்திரத்தில் சூடு வைப்பாங்க. அதுவும் எந்த சந்தேகமும் வராத அளவில் சூடு வைப்பார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை