உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் வாயிலாக ஆள்சேர்க்கும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள்

ஆன்லைன் வாயிலாக ஆள்சேர்க்கும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள இளைஞர்களை, 'ஆன்லைன்' வாயிலாக மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்புகளில் சேர்க்கும் முயற்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஜம்மு - காஷ்மீரில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து, தங்கள் அமைப்புகளில் சேர்க்கும் பணியை, பாக்., பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றன.இதனால், எல்லைகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும், தங்கள் முயற்சியை விடாத பயங்கரவாத அமைப்பினர் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக தங்கள் துாது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முயற்சியும் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவுப் பிரிவும், அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் உள்ள வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து சமூக வலைதளங்கள் வாயிலாக ஆள்சேர்ப்பு பணியில் அந்நாட்டு உளவுப் பிரிவும், பயங்கரவாத அமைப்புகளும் 'செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக 'எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம்' போன்ற செயலிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.போலி கணக்குகள் துவங்கி, அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக ஆசை காட்டி அப்பாவி இளைஞர்களை சேர்க்கும் பயங்கரவாத அமைப்புகள், பின் தனியாக குழு ஒன்றை துவங்கி அதில் நம் பாதுகாப்பு படையினர் தொடர்பான போலி வீடியோக்களை பதிவிடுகின்றனர்.இந்திய ராணுவ வீரர்கள் அட்டூழியம் செய்வதாக நம்பத்தகுந்த வகையில் வீடியோக்களை வெளியிட்டு, இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இதற்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யும் உடந்தையாக உள்ளது. அவர்கள் சொல்வதை நம்பி பலரும் அதில் சேர்வதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ponssasi
அக் 21, 2024 13:48

இந்த ஆள்சேர்ப்பு படலத்தை இந்திய அரசு முன்னின்று செய்ய வேண்டும். அதை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தவேண்டும். சேர்ந்தவர்கள் அனைவரையும் கொண்டுசென்று பாகிஸ்தான் மண்ணில் விட்டுவிடவேண்டும். இங்கு துரோகியாக இருந்துகொண்டு குண்டுவைப்பது, ரயில் கவிழ்ப்பு வேலைகளை செய்வதைவிட நாமே அவர்களை பாதுகாப்பாக அங்கு தள்ளிவிடுவது என் தாய் நாட்டுக்கு நல்லது .


N.Purushothaman
அக் 21, 2024 12:31

இரண்டு தினங்களுக்கு முன்பு வேலை தேடி ஆப்கானிஸ்தான் ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து ஈரானுக்கு சென்ற அப்பாவி பெண்கள் மற்றும் கூலியாட்களை ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் ஈவு இறக்கமின்றி சுட்டதில் கிட்டத்தட்ட இருநூற்று அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் .... அதாவது பஞ்சம் பிழைக்க ஒரு இஸ்லாமிய நாட்டில் இருந்து இன்னொரு இஸ்லாமிய நாட்டிற்கு செல்வதை கூட விரும்பாத அந்த நாடு இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களின் வேற்றுமையை மறந்து ஒன்றிணைய வேண்டும்ன்னு சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டின் காமினி கூவுனாப்புல ...நடப்பதோ அதற்க்கு நேரெதிர் ....நம்ம நாட்டுல இருக்குற ஈத்தரைங்க அனைவருக்கும் குடியுரிமை கொடுக்கணும்ன்னு கூவுனானுங்க ....


Rasheel
அக் 21, 2024 11:53

ஜிஹாதிகள் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டான்.


Barakat Ali
அக் 21, 2024 10:51

வடமாநிலங்களில் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் இஸ்லாமியர்கள் என்றாலே சந்தேககக் கண்ணுடன் பார்க்கின்றனர் ..... பெங்களூரில் படிப்பதற்காக சென்ற உறவினர் பையனுக்கு வாடகைக்கு வீடு பிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது .......


J.V. Iyer
அக் 21, 2024 07:30

எப்படி போர்கிஸ்தான் திருந்தும்? போர்கிஸ்தானில் இருப்பவர்கள் நரகத்தில் வாழ்பவர்கள். அவர்களுக்கு விமோச்சனம் கிடையாது.


raja
அக் 21, 2024 07:28

எதுக்கு ஆன்லைன் ல.. எங்கள் மாநிலத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்துபவர்கள் உங்களை தொப்புள் கொடி உறவுகள் என்பதால் நீங்க நேராக இங்கு வந்து ஆள்களை சேர்க்கலாம் காவல் துறை உங்கள் மேல் நடவடிக்கையே எடுக்காது, குண்டு வைத்து விலையாண்டாலும் சமயல் எரிவாயு உருளை வெடித்தது என்று உங்களை காப்பாற்றும்.. என்ன அப்பப்போ என் ஐ ஏ வந்து உங்களை பிடிக்கும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை