மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4
புதுடில்லி : 'நிடி ஆயோக்' அமைப்பின் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா, 16வது நிதி கமிஷனின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். நிதி கமிஷன் என்பது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நிதி உறவுகளை வரையறுக்க உருவாக்கப்பட்டதாகும். இந்நிலையில், 16வது நிதி கமிஷனின் தலைவராக, நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா நேற்று நியமிக்கப்பட்டார்.இதற்கிடையில், ரித்விக் ரஞ்சனம் பாண்டே நிதி கமிஷனின் செயலராக பதவி வகிப்பார் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும், கமிஷனின் மற்ற உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு தனித்தனியாக அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.நிதி கமிஷனின் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் பிற உறுப்பினர்கள், அவர்கள் பதவி ஏற்கும் தேதியிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கும் தேதி அல்லது 2025ம் ஆண்டு அக்., 31ம் தேதி வரை, எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பர்.இந்த கமிஷனின் அறிக்கை, 2025ம் ஆண்டு அக்., 31ம் தேதிக்குள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
1 hour(s) ago | 4