வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கமகன் பிரவீன் குமாருக்கு வாழ்த்துக்கள்.
பாரிஸ்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று (செப்.,5) வரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது.இன்று, பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இது ஆசிய சாதனையாகவும் பதிவானது. இவர் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். இதன்மூலம் 6 தங்கம் உட்பட இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தங்கமகன் பிரவீன் குமாருக்கு வாழ்த்துக்கள்.