உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிந்து நதி ஒப்பந்தம் வேண்டும்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

சிந்து நதி ஒப்பந்தம் வேண்டும்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

புதுடில்லி: தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என இந்தியாவுக்கு 4 கடிதங்களை பாகிஸ்தான் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=86p5rhxi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தும் வரை ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது என இந்தியா உறுதிபடத் தெரிவித்து உள்ளது.இந்நிலையில்,தற்போது பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அந்நாட்டின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். இதே கோரிக்கையுடன் மேலும் 3 கடிதங்களை அவர் இந்தியாவுக்கு அனுப்பி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த கடிதங்களை, மத்திய நீர்வளத்துறை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், சிந்து நதிநீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என உலக வங்கியிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nathan
ஜூன் 07, 2025 13:33

முதலில் காஷ்மீரை விட்டு வெளியே போ அப்புறம் மத்த விஷயங்கள் பத்தி பேசி தீர்த்துக் கொள்ள கொள்ளலாம்


K.Uthirapathi
ஜூன் 07, 2025 11:48

அனைத்து தீவிரவாதிகளையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது இந்திய இராவத்தை பாக்கிற்குள் நுழைந்து, அழிக்க அனுமதிக்க வேண்டும். இவை இரண்டில் ஒன்றை ஏற்காத வரை பன்றிகளுக்கு சிந்து நதி நீரில் ஒரு சொட்டு கூட விடக்கூடாது. ஜெய் ஹிந்துஸ்தான்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 07, 2025 08:09

முதலில் சிந்தூர் ஒப்பந்தம் முடியட்டும்


Kalyan Singapore
ஜூன் 07, 2025 03:13

பாக்கிஸ்தான் அவர்கள நாட்டிலுள்ள பயங்கர வாதிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தியாவில் பயங்கரவாதம் செய்தவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் .அப்போது வேண்டுமானால் புது ஒப்பந்தம் பற்றி இந்தியா யோசிக்கலாம்


ருத்ரன்
ஜூன் 07, 2025 00:48

இந்திய அரசு விதித்திருக்கும் நிபந்தனைகள் பற்றி வாய் திறக்கிறார்களா பாருங்கள். அந்த காலத்து பண்ட மாற்று முறை போல தீவிரவாதிகளை, முக்கியமாக இரு தீவிரவாத தலைவன்களை இந்தியாவிடம் ஒப்படைத்தால் தண்ணீர். இல்லை என்றால் ஒரு .........ம் கிடையாது.


Ramesh Sargam
ஜூன் 06, 2025 22:37

அவர்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதிகளையும், அவர்கள் முகாம்களையும் பாக்கிஸ்தான் அரசு முற்றிலும் அழித்தால் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுக்கலாம்.


G Ragavendran
ஜூன் 06, 2025 22:08

Can consider their once they get out from Kashmir and eliminate those terrorist groups


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை