உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவக்க கல்விக்கு தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்கள்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

துவக்க கல்விக்கு தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்கள்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானா, மணிப்பூர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆரம்ப கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. ஆரம்ப கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தேசிய அளவில், ஆரம்ப கல்வியில் படிக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் 66.7 சதவீதம் பேர் அரசு பள்ளியிலும், 23.4 சதவீதம் பேர் அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஹரியானா, மணிப்பூர், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் , 1 முதல் 5ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகமாக உள்ளது.ஹரியானாவில் 45.6 சதவீதம் பேர் தனியார் பள்ளியிலும்,40.2 சதவீதம் பேர் அரசு பள்ளியிலும்தெலுங்கானாவில் 57.5 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளிலும் 30.5 சதவீதம் பேர் அரசு பள்ளியிலும் மணிப்பூர் மாநிலத்தில் 74 சதவீதம்பேர் தனியார் பள்ளிகளிலும், 21 சதவீதம் பேர் அரசு பள்ளிகளிலும் படிக்கின்றனர்.நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தான் அதிகளவு தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்களில் 43.8 சதவீதம் பேர் தனியார் பள்ளியிலும், அரசு பள்ளியில் 36.5 சதவீதம் பேரும் குழந்தைகளை சேர்த்து உள்ளனர். இதற்கு மாறாக , ஆரம்ப கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்கள்மேற்கு வங்கம் 5 சதவீதம் பேர்.திரிபுரா 6.2 சதவீதம் பேர்ஒடிசா 6.3 சதவீதம் பேர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 09:57

அதே அல்லக்கைகள் தனியார் பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் வர முயல்வார்கள் தான்.


Ramesh Sargam
நவ 03, 2024 12:50

கல்வியில் மட்டும் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுவதில்லை. உடம்புக்கு ஏதாவது சிறு காய்ச்சல் போன்ற பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் நாடுவது தனியார் மருத்துவமனைகளையே. ஆக மக்கள் மனதில் அரசு பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள் என்றாலே ஒரு பயம். அந்த அளவுக்கு சீர்கெட்டு உள்ளன அவைகள். ஒரு மந்திரியின் மகனோ, மகளோ அரசு பள்ளிகளில் பயில்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்வதில்லை. அந்த அளவுக்கு மந்திரிகளுக்கே அரசு பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் பிடிப்பதில்லை.


வைகுண்டேஸ்வரன்
நவ 03, 2024 13:39

"ஒரு மந்திரியின் மகனோ, மகளோ அரசு பள்ளிகளில் பயில்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்வதில்லை" - இதற்கு காரணம் நம்பிக்கையின்மை அல்ல. மந்திரியோ அவரது குடும்பத்தினரோ அரசு பள்ளி, மருத்துவ மனைகளுக்கு வந்தால் கட்சிக்காரர்கள், மக்கள், போலீஸ் என்று அனாவசியமாக கூட்டம் சேர்ந்து சாதாரண பொது மக்கள் அவதிப் படுவார்கள். இதைத் தவிர்க்கவே அவர்கள் அரசு மருத்துவ மனை, பள்ளிகளுக்கு வருவதில்லை.


raja
நவ 03, 2024 14:07

கொடுத்த காசுக்கு மேலேயே கூவுறாண்டா இந்த கொத்தடிமை ...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 03, 2024 15:29

"கொடுத்த காசுக்கு மேலேயே" கருத்தை எழுதியவரோ, அவருக்கு பதில் சொன்னவரோ குறிப்பாக தமிழகத்தை எண்ணிப் பதிவிட்டதாகத் தோன்றவில்லை ....


raja
நவ 03, 2024 18:47

கொத்தடிமை என்றால் அனைவருக்கும் புரியுமே தர்மா...


Ramesh Sargam
நவ 03, 2024 20:22

அடே வைகுந்தேஸ்வரா, அதே அல்லக்கைகைகள் தனியார் மருத்துவமனைக்கும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் வரமாட்டார்களா? அங்கே உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா? ஏன் இப்படி சில்லறைத்தனமாக கூவுகிறாய்? கூவுனத்துக்கு ரூ. இருநூறு வாங்கிட்டியா. போய் வாங்கிக்கோ.


narayanansagmailcom
நவ 03, 2024 12:12

ஆரம்ப கல்வி தான் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். பேஸ்ட்மென்ட் சரி இல்லை என்றால் கட்டடம் வீக் ஆகிவிடும். அரசு பள்ளிகளில் எதுவும் சரியாக நடக்காது. மந்திரி பிள்ளைகளை கூட யாரும் அரசு பள்ளியில் சேர்ப்பது இல்லை. நம் திராவிட மாடல் நம் தமிழ் மக்களை எப்படி ஏமான்றுகிறது என்பது இப்போது வெட்ட விளமாகி விட்டது. திமுகவில் எல்லாம் வெட்டி முண்டம் வீனா போன தண்டம். விஜய் அவர்களே இதை போல மக்களுக்கு உண்மையில் தேவையான திட்டங்களை மட்டும் தீட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான விடியலை தர வேண்டும். ஜெயஹிந்த்


சமீபத்திய செய்தி