உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ

பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.பார்லி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பார்லிமென்ட் அலுவல்கள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l4493llp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், விளையாட்டு தொடர்பான இரண்டு முக்கிய முன்மொழியப்பட்ட சட்டங்களை லோக்சபா ஏற்க மறுப்பு தெரிவித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த கிரண் ரிஜிஜூ, '' பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என எச்சரித்தார். மேலும் அவர் கூறியதாவது: தேசிய நலனுக்காக மசோதாக்களை நிறைவேற்ற அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். விளையாட்டு தொடர்பான 2 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.2036ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் முயற்சியைக் கருத்தில் கொண்டு இவை முக்கியமானவை. 3வது வாரமாக அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. பீஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் குறித்த விவாதங்களை பார்லியில் நடத்த முடியாது. ஏனெனில் இந்த நடைமுறை தேர்தல் கமிஷனின் நிர்வாக நடவடிக்கை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

J.Isaac
ஆக 05, 2025 20:36

எதிர்பார்த்தது தானே


Shivakumar
ஆக 12, 2025 03:36

அப்படித்தானே செய்வோம். உங்களால் எந்த பலனும் இல்லையென்றால் அப்படித்தானே நிறைவேற்றுவோம்.


Ram
ஆக 05, 2025 17:25

சரியான பதிலடி சார்


Rengaraj
ஆக 05, 2025 17:15

அது என்ன பொதுக்கூட்ட மேடையா ? சபை நாகரீகம் தெரியாதவர்கள் எல்லாம் எதற்கு பாராளுமன்றத்துக்கு எம்பியாக வரவேண்டும். நாய்களை விட கேவலமாக கத்துவதற்கா பாராளுமன்றம் இருக்கிறது. ? அங்கே சென்று கத்துவதற்கா ஓட்டுப்போட்டு மக்கள் தேர்ந்தேடுத்தார்கள் ? எந்த கட்சியாக இருந்தால் என்ன ? பாராளுமன்ற நடவடிக்கை முறைகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டு மக்கள் பிரச்சினையை பேச தெரியாதவர்கள் எல்லாம் எம்பிக்களாக இருந்து கிழித்துவிடப்போகிறார்களா என்ன ?? பேசி காரியத்தை தங்கள் தொகுதிக்களுக்கோ அல்லது தாங்கள் சார்ந்த மாநிலத்துக்கோ அனுகூலமாக சாதிக்கமுடியாதவர்கள் எதற்கு மக்களிடம் " அப்படி செய்வேன், இப்படி செய்வேன் " அன்று நாக்கூசாமல் பொய்சொல்லி வோட்டுக்கேட்டு வரவேண்டும்? எதற்கு ஜெயித்து மக்களை ஏமாற்றவேண்டும் ?


சிந்தனை
ஆக 05, 2025 16:39

அருமை நன்மை மக்கள் வரியின் அருமை தெரியாத எம்பிக்களை வைத்துக்கொண்டு அழுவதை விட நம் கடமையை செய்வதே நல்லது


என்றும் இந்தியன்
ஆக 05, 2025 15:58

பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ. அருமையிலும் அருமை உடனே அப்படியே செய்யவும்


Sridhar
ஆக 05, 2025 14:39

இத முதல்லயே செஞ்சிருக்கலாமே? ஏன் பாராளுமன்றம் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்? சட்டசபைகள் எல்லாம் குண்டுக்கட்டா எதிர்கட்சிகளை செக்கூரிட்டிஐ வச்சு வெளியே தள்ளி ஆக வேண்டிய வேலைகளை முடிக்கும்போது, இங்கு மட்டும் ஒவ்வொரு தடவையும் இதே பிரச்சனை இதுக்கு எதுக்கு இவனுகளுக்கு விமான டிக்கெட்டு தங்கும் இட வசதி எல்லாம்? மக்கள் பணம் டோடல் வேஸ்டு


Mariadoss E
ஆக 05, 2025 14:14

அப்பிடி போடு. பிஜேபி எதிர் கட்சியா இருந்தபோ அமளி பண்ணினது இல்லையா? பேசாம ராணுவ ஆட்சிய அமல் படித்துங்க. யாரும் கருத்தும் சொல்லக் கூடாது ஒகே தானே.


Sridhar
ஆக 05, 2025 15:14

அமளி பண்ணிதான் கருத்து சொல்லனுமா? டீசண்டா பேச தெரியவே தெரியாதா?


vivek
ஆக 05, 2025 16:10

ஆமாம் மரியதாஸ்....தூக்கி போட்டு மிதிகனும்....


Ramesh Sargam
ஆக 05, 2025 12:26

பார்லியில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம்: கிரண் ரிஜிஜூ. உடனே செய்யுங்கள். மக்களின் நலன்தான் முக்கியம். வீம்புக்கு ரகளை செய்யும் எதிர்கட்சியினரை முழுமையாக ஒதுக்கவும். மசோதாக்கள் மீதான அவர்களின் கருத்து இனி தேவையில்லை.


M Ramachandran
ஆக 05, 2025 12:17

நீங்க கூறுவது நியாய மானதெ.


Tirunelveliகாரன்
ஆக 05, 2025 12:05

ஒரு நாள் நீங்கள் காணாமல் போவீர்கள். அல்லது இந்தியர்கள் உங்களை காணாமல் ஆக்கி விடுவார்கள்.


Ganapathy
ஆக 05, 2025 12:53

இதை உனது திராவிட களவாணிகளிடம் போய்ச் சொல்.


M S RAGHUNATHAN
ஆக 05, 2025 13:12

அது எப்படி ? இந்திரா 1975 இல் தான் நினைத்த மாதிரி அரசியல்.சாசனத்தை மாற்றியது தெரியுமா ? எதிர் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரையும் கைது சிறையில் வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை கேலிக் கூத்தாகியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு என்றுமே ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தது இல்லை. உச்ச நீதி மன்றம் ஷா பானு வழக்கில் தீர்ப்பு அளித்ததை ரத்து செய்து தனக்கு இருந்த மிருகபல பெரும்பான்மையை காட்டியது நினைவிற்கு வருகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை