உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபா, ராஜ்யசபாவில் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகிறது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதால், கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் முற்றிலுமாக வீணாகின. இந்நிலையில் 16 வது நாளான இன்று ( ஆகஸ்ட் 11 ) பார்லிமென்ட் இரு அவைகளும் வழக்கம்போல் கூடின.லோக்சபாவில் வழக்கமான அலுவல்கள் இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி எம்பிக்களை பலமுறை எச்சரித்தார்.அவர், 'அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எம்பிக்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது' என்று வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பார்லிமென்ட் தொடர்ந்து செயல்படாமல் முடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R. SUKUMAR CHEZHIAN
ஆக 11, 2025 17:47

தேவை இல்லாமல் தொடர்ந்து பார்லிமெண்டை முடக்கி வரும் நம் நாட்டின் எதிரி கட்சி எம்.பிகள் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் பிடுங்க வேண்டும், இந்த நாகரீகம் இல்லாத கும்பல்கள் மக்களின் வரிப்பணத்தை வீண் அடிப்பது மனதுக்கு வேதனையாக உள்ளது.


ரங்ஸ்
ஆக 11, 2025 17:40

மற்ற துறை பணியாளர்களுக்கு என்ன நடத்தை விதிகளோ அதைக் கொண்டு வாருங்கள். நோ வொர்க் நோ பே, டிசிப்ளினரி ஆக்ஷன் முதலியன கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே இவர்களால் மக்களுக்கு ஏதேனும் நல்லது நடக்கும்.


Thirumal Kumaresan
ஆக 11, 2025 16:40

இவனுங்க அரசியல் செய்வதற்க்காகவா பார்லிமென்ட் கடடபட்ட்து,ஏதாவது நாட்டுக்கு நல்லதா பேசியவர்கள் குறைவு, மக்கள் பணம் எப்படி நாசமாக போவது சங்கடமாகத்தான் இருக்கிறது, யாரு இவர்களை கேட்ப்பது கஷடபடுகிறது ஜனநாயகம்


Narayanan
ஆக 11, 2025 14:48

இப்படி ஒத்திவைத்தால் மட்டும் மீண்டும் நடக்க விடுவார்களா ? மீண்டும் கூடும்போதும் சப்தம் செய்து விட்டு கேன்டீனை நோக்கி போய்விடுவார்கள் . கேன்டீனை மூடுவது நன்று .


Narayanan
ஆக 11, 2025 14:43

சட்டஅமைச்சகம் விரைவில் ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே ஜனநாயகம் தழைக்கும்.


Vijayalakshmi Lalithkumar
ஆக 11, 2025 14:17

Bills will be passed without discussion! Every sessions this is happening. Not sure opposition just needed some subjects to protest and hd activities! This is what we are seeing in past few years.


Santhakumar Srinivasalu
ஆக 11, 2025 13:11

அமளியில் ஈடுபடும் ஏம் பி/ எம் எல் ஏக்கள் சம்பளம்/ அலவன்ஸ் இல்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும்!


Shivakumar
ஆக 11, 2025 13:07

என்ன பித்தலாட்டம். இந்த மாதிரி இரண்டு அவைகளையும் முடக்கினால் மக்கள் உங்களை என்னவென்று சொல்லுவார்கள். ஒன்றும் தெரியாத ஒரு எதிர்க்கட்சி தலைவனை வைத்துக்கொண்டு இருந்தால் என்றைக்கு இந்த நாடு உருப்படும்.


P. SRINIVASAN
ஆக 11, 2025 12:42

ஆளும் கட்சி செய்யும் பித்தலாட்டங்களை சொன்னால் அமளி என்பார்கள்.


Ramona
ஆக 11, 2025 13:01

ஆஹா என்ன கண்டுபிடிப்பு, உத்தம எதிர் கட்சிகள் ,கறைபடியாத கரம் கொண்ட தேசபக்தர்கள்.


நல்லவன்
ஆக 11, 2025 13:02

சரியான பதிவு சிரினிவாசன்!!! 65 லட்சம் மக்கள் பெயர்கள் காணவில்லை... citizen movie போல உள்ளது


SUBBU,MADURAI
ஆக 11, 2025 13:29

அந்த 65 லட்சம் பேரும் உயிரோட இருந்தால் தேர்தல் கமிஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே! ஏன் இப்படி வாய்க்கு பத்தாத பேச்சையெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறீர்கள்...


vijai hindu
ஆக 11, 2025 14:26

எதிர்க்கட்சி ஜால்ரா


ASIATIC RAMESH
ஆக 11, 2025 12:39

முதலில் இந்த அரசியல் தலைவர்கள், MP மற்றும் MLAக்கள் மீதான வழக்குகளை விரிவுபடுத்தி உண்மையிருப்பின் தகுதி நீக்கம் செய்யவேண்டும். ஜாமினில் இருந்தால் கூட்டத்தொடருக்கு அனுமதி தரக்கூடாது.. அவ்வாறு செய்தால் தகுதிவாய்ந்த நல்ல அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். அவர்களின் பேச விரும்பும் கருத்துக்களை தேவைப்பட்டால் எழுத்து மூலம் எழுதிவாங்கி நாட்டிற்கு பயன்படும்விதமாக இருந்தால் அனுமதிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை