உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகள் அமளி; பார்லிமென்ட் தொடர் முடக்கம்!

எதிர்க்கட்சிகள் அமளி; பார்லிமென்ட் தொடர் முடக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் நாளை (டிச.,03) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கி வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு, இன்று (டிச.,02) பார்லிமென்ட் இரு அவைகளும் கூடின.காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கூச்சலிட்டனர். தொழிலதிபர் அதானி விவகாரம், உ.பி.,யின் சம்பல் மற்றும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி, அமளியில் ஈடுபட்டனர். அமைதி காக்கும் படி, ஓம்பிர்லா பலமுறை கூறினார். எதிர்க்கட்சியினர் துளி அளவு கூட மதிக்கவில்லை. அவர் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.மீண்டும் 12 மணிக்கு அவை கூடியது. அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், நாளை (டிச.,03) காலை 11 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். ராஜ்யசபாவிலும் இதே கதை தான். காலை 11:00 மணிக்கு சபை கூடிய சில மணி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியது. அப்போதும், அதானி, சம்பல், மணிப்பூர் என்ற கோஷங்கள் சபை முழுதும் எதிரொலித்தன. சபை ஒழுங்கை பராமரிக்கவும், கேள்வி நேரத்தை செயல்பட அனுமதிக்கும்படியும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் கோரிக்கை விடுத்தார். அதை பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால் அவையை நாளை (டிச.,03) காலை 11 மணி வரை ஒத்திவைத்து, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார். பார்லிமென்ட் இரு அவைகளும் எந்த மசோதாவும் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து முடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
டிச 03, 2024 09:11

பார்லிமெண்ட்டை இழுத்து மூடிட்டு சபர்மதி படம் பாக்க போயிட்டாங்க.


sankaranarayanan
டிச 02, 2024 20:47

மக்கள் பணத்தை வீணாக்கும் இவர்களின் மீது ஏன் சபாநாயகர் தகுந்த நடவடிக்கைளை எடுக்கக்கூடாது இவர்களின் சமபளத்தையும் தினம் தரும் படிகளையும் நிறுத்த வேண்டும் அரசாங்க வேலையாட்கள் தர்ணா செய்தால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது இவர்களும் அரசாங்க வேலையாட்கள்தான் இவர்களுக்கு இந்த மட்டும் வேலைசெய்யாத நாட்களுக்கு சம்பளம் எதற்கு


Siva Subramaniam
டிச 02, 2024 20:03

This is going beyond joke These parliamentarians are very highly paid but not be with responsibility. Mr.Modi has be quiet so far, knowing well all opposition activities are well planned along with ing session of parliament since he took over as Prime minister of India. Wonder why there is NO law to expel permanently the noise makers from Parliament?


AMLA ASOKAN
டிச 02, 2024 18:30

அதானி விவகாரம், சம்பல் மசூதி வன்முறை , மற்றும் மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சினைகளை அவை கூடிய உடன் விவாதிப்பதை ஏன் மத்திய அரசு தள்ளிப்போடவும் , மறுக்கவும் வேண்டும் ? பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பது நாட்டு மக்களின் பணத்தை வீணடிப்பதாகும் என்றால் எதற்காக இந்த கட்டிடத்தை 1000 கோடி செலவில் கட்ட வேண்டும் . அரசு கடைசி நாளன்று மசோதாக்களை நிறைவேற்றி பழக்கப்பட்டு விட்டதால் பாராளுமன்றம் செயல் பட தேவை இல்லை .


vadivelu
டிச 03, 2024 07:31

அதானி விவகாரம் ஏன் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சாம்பல் வன்முறை மணிப்பூர் கலவரம் விவாதிக்க ஏன் முன்னுரிமை தரணும். அவை கூடிய உடன் அவை நடக்க கூடாது என்றுதானே கூச்சல் போடுகிறார்கள். அவை ஆரபிக்கட்டும், எதற்காக அவை கூட்டப்படுகிறது என்று ஒரு அரை மணி நேரம் காத்து இருக்க கூடாதா. இப்படி இருந்தால் நீங்கள் பா ஜா கா அரசை இன்னும் அரை நூற்றாண்டுகளுக்கு குறை சொல்லி கொண்டேதான் இருக்கணும். அதிக மக்கள் உங்கள் நிலையில் இருந்து இரு வேறு பட்டு இருக்கிறார்கள்.


Sundar R
டிச 02, 2024 15:08

அமளியில் ஈடுபடும் எதிர்கட்சி எம்.பிக்கள் அனைவரையும் வெளியேற்றி மசோதாக்களை நிறைவேற்றலாம். முதல் தடவை அமளியில் ஈடுபட்டால் அலவன்ஸ்களை கட் பண்ணலாம். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் எம்.பி பதவியில் இருந்து எக்ஸ்பெல் பண்ணலாம். அன்றாடம் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பது நாட்டு மக்களின் பணத்தை வீணடிப்பதாகும். பிச்சைக்காரன் கூட கையில் கிடைக்கும் பிச்சைக்காசை செலவிட்டு ஒரு சோப்பு வாங்கினாலும் வரி கட்டுகிறான். பிச்சைக்காரன் கட்டும் வரிப்பணத்தில் பாராளுமன்ற அன்றாட நடைமுறைகள் செயல்படுகிறது என்பதை பாராளுமன்ற எம்.பிக்கள் உணர வேண்டும். ஓட்டுக்கு பிச்சை, பிச்சைக்காரன் கட்டும் வரிப்பணத்தில் டில்லியில் சொகுசு வாழ்க்கை, கேண்டீனில் சாப்பாடு, ஊழல் பணம் இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டு பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது அசல் கேப்மாரித்தனம்.


Ganapathy
டிச 02, 2024 14:31

அதானி மீது விசாரிக்கணும்னா இவனுங்ககூட்டணி ஆட்சி உள மாநில அரசுகளைத்தான் விசாரிக்கணும். சமபல் விஷயம் காங்கிரஸும் சமாஜ்வாதியும் முஸ்லிம்களை தூண்டிவிட்டு செய்த அய்யோக்கியத்தனம். மணிப்பூரும் காங்கிரஸுடன் போதை கும்பல்+ மிஷனரியும் சேர்ந்து செய்யும் தேசவிரோத செயல். இந்த கட்சிகளின் அங்கிகாரத்தை உச்சநீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் ஏன் நிரந்தரமாக கேன்சல் செய்யக்கூடாது? அமெரிக்ககோர்ட் தனது அதானி மீதான தீர்ப்பை திருத்தியதை ஏன் பாஜாக மக்களுக்கு விளக்கவில்லை? இண்டி கூட்டணி இன்னமும் அசிங்கப்பட வேண்டும். ஊழல் காந்தியை எதிர்கட்சி தலைவனாக்கி தனது தலையில் கொள்ளி வைத்துக்கொண்டன. தனது தொகுதிப் பிரச்சனையைக்கூட எழுப்ப விடாமல் ஊழல் காந்தியின் பேச்சுக்கு ஆடும் எம்பிகள் மண்ணைக்கவ்வப் போவது வரும் தேர்தலில் உறுதி. மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். பார்லியில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் பேசலாம் என்பது கருத்துச் சுதந்திரமில்லை. நாகரீக நடவடிக்கைக்கு புதிய விதிகள் தேவை.


ரகுநாதன்
டிச 02, 2024 14:18

எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சிகளாக உள்ள வரை தேய்ந்து தான் போவர்.


RAMAKRISHNAN NATESAN
டிச 02, 2024 14:06

மக்களது வரிப்பணம் வீணாவது குறித்த கவலை இல்லை .... பொறுப்பில்லை ..... தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்யும் எதிர்க்கட்சி எம் பி கள் .....


GMM
டிச 02, 2024 14:03

தாக்கல் செய்யும் மசோதாவின் நன்மை, தீமை விவாதித்து, அதிக நன்மை இருந்தால் , சட்டமாக்க அதனை ஏற்றுக்கொள்ளும் இடம் பாராளுமன்றம். நடப்பில் உள்ள சட்ட விதியில் உள்ள குறையை காலத்திற்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டும். அதானி, சம்பல், மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் தினமும் நிகழும். இதனை விவாதிக்கும் இடம் பாராளுமன்றம் கிடையாது. விவாதித்தால் ஆண்டு முழுவதும் மூட முடியாது. உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுத்து, விதிகள் விளக்கி தேர்ச்சி பெற்ற பின் பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும். மக்கள் பொழுது போகாமல் வரி செலுத்தி வருவதாக எண்ண வேண்டாம்.


rasaa
டிச 02, 2024 13:35

கேண்டீனில் வடை சாப்பிடத்தான் எதிர்கட்சிகள் உள்ளார்கள். இவர்களுக்கு நமது வரிப்பணம் வீண். உச்ச நீதி மன்றம் மக்களின் வரிப்பணத்தை மீட்டுத்தரவேண்டும்.


சமீபத்திய செய்தி