உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கு: சித்ரவதை செய்ததாக புகார்

பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கு: சித்ரவதை செய்ததாக புகார்

புதுடில்லி: பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர், இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரச் சொல்லி, டில்லி போலீசார் சித்ரவதை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்தது. டிச., 13ம் தேதி, லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த இருவர், வண்ண புகை குண்டுகளை வீசினர். இதே போல், பார்லி.,க்கு வெளியே இருவர் வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்த வழக்கில், மனோரஞ்சன், சாகர் சர்மா, நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, 'உபா' எனப்படும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், புதுடில்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர் முன், மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் ஷிண்டே, லலித் ஜா, மகேஷ் குமாவத் ஆகியோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள், '70க்கும் மேற்பட்ட வெள்ளைத்தாள்களில் கையெழுத்திடும்படி, போலீசார் எங்களை கட்டாயப்படுத்தினர். மேலும், இந்த சம்பவத்தில், தேசிய அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரச் சொல்லி, 'எலக்ட்ரிக் ஷாக்' கொடுத்து சித்ரவதை செய்தனர்' என, நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.இது குறித்து, டில்லி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஹர்தீப் கவுர், ஆறு பேரின் நீதிமன்றக் காவலை, மார்ச் 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை பிப்., 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

chennai sivakumar
பிப் 01, 2024 12:52

I fully agree with Mr. Raja's views. சும்மா விட்டு வைத்தால் பிள்ளை பூச்சி போல குடைச்சல் கொடுத்து கொண்டு இருப்பார்கள். இதுக்கு ஒரு வேளை வெட்டி இல்லாத கூட்டம் இருக்கும்.


duruvasar
பிப் 01, 2024 11:45

ஆஸ்திரேலியாவிலும் இந்த ஷாக் ட்ரீட்மெண்ட் உள்ளதாம்.


Velan Iyengaar
பிப் 01, 2024 09:24

என்ன வேலை எல்லாம் பார்க்கிறார் பாருங்க ... நாட்டை காப்பற்ற .....


Velan Iyengaar
பிப் 01, 2024 10:01

புத்தம் புது பாராளுமன்றத்தை பாதுகாக்க என்ன வேலை எல்லாம் பார்க்கிறார் பாருங்க


Velan Iyengaar
பிப் 01, 2024 08:51

ஒன்றிய உளவு துறை உள்துறையிடம்... அதன் தோல்வி....அப்புறம் delhi police உள்துறையிடம்....கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்


பேசும் தமிழன்
பிப் 01, 2024 08:27

இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது.... அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோவை பார்த்தாலே தெரிகிறது.. எல்லோரும் பயத்தில் ஓடி கொண்டு இருக்க.. ஒருவர் மட்டும் இது சாதாரண கலர் புகை தான்... என்று தெரிந்து சிரித்து கொண்டு போட்டோக்கு போஸ் கொடுக்கிறார்.. இதிலிருந்தே இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.


Anantharaman
பிப் 01, 2024 07:59

இந்தக் குற்றவாளிகள் கூறும் பொய்களை நீதி மன்றம் நம்பினாலும் மக்கள் நம்பத் தயாரில்லை


Velan Iyengaar
பிப் 01, 2024 09:21

மக்கள்.....ஊரை ஏமாற்றுவதை முழு நேர தொழிலாக வைத்திருப்பவர்களிடம் இருந்து நீண்ட தூரம் விலகி நிற்கவேண்டும்


KumaR
பிப் 01, 2024 11:17

நீங்க தமிழ்நாட்டை தான் சொல்லுறீங்க. கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டை திருட்டு கும்பல்ட இருந்து ரொம்ப தூரம் மக்கள் விலகி வைப்பாங்க..


GMM
பிப் 01, 2024 07:44

70 மேற்பட்ட வெள்ளை தாளில் கையெழுத்து.? எழுத தெரிந்தவரை தன் கைப்பட போலீசார் எழுத சொல்லி வாங்கும் வழக்கம்? இந்த தகவல் பொய்?பிஜேபியும் தேசிய அரசியல் கட்சி தான். பிரபலமான வழக்கு. ஷாக் கொடுத்து விசாரிக்கும் அளவிற்கு போலீஸார் முட்டாள் அல்ல. பின்புலத்தில் அரசியல் உள்ளது.


Duruvesan
பிப் 01, 2024 07:22

கைதி தப்பிதார், போலீஸ் தற்காப்புக்கு விரைவில்


J.V. Iyer
பிப் 01, 2024 06:37

செய்தது குற்றம். இதில் இவர்கள் சொல்வதை யார் நம்புவார்கள்? இந்த கழகக்காரர்கள் குணம் எல்லா குற்றவாளிகளிடமும் உள்ளது. என்ன செய்ய.


வெகுளி
பிப் 01, 2024 06:24

பத்தல.... பத்தல... விசாரணையை தீவிரப்படுத்துங்க....


மேலும் செய்திகள்







புதிய வீடியோ