உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிப்பு

உ.பி.,யில் பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிப்பு

பதேபூர்: உத்தர பிரதேசத்தில், 185 ஆண்டுகள் பழமையான மசூதியின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது. உ.பி.,யின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள லாலாவ்லி நகரில் பழமையான நுாரி மசூதி உள்ளது. இந்நிலையில், பான்டா - பஹ்ரைச் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பொதுப்பணித்துறையினர் நேற்று இந்த மசூதியின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர். ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மசூதியில் 65 அடி நீளமுள்ள பகுதியை புல்டோசர் வைத்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக மசூதியின் ஒரு பகுதியை இடித்து அகற்ற மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். ஆனால் மசூதி நிர்வாகம் அகற்றாததால் நாங்கள் இடித்து அகற்றினோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் மசூதி மேலாண்மை குழு தலைவர் முகமது மொய்ன் கான் கூறுகையில், ''நுாரி மசூதி 1839ல் கட்டப்பட்டது. மசூதியை சுற்றியுள்ள சாலை 1956ல் தான் அமைக்கப்பட்டது.''எனினும் மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ''இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 08:46

மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது ....... ஆதித்யநாத்துக்கு மட்டும் இரும்புக்கரம் எங்கிருந்தையா கிடைச்சுது ???? சர்வாதிகாரி உசாவல் .....


AMLA ASOKAN
டிச 11, 2024 08:45

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்ற நிலையில் புல்டோசர் மூலம் இடிப்பது யோகி அரசின் வாடிக்கையான செயல் தான் . முஸ்லிம்களின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தவும் , மத கலவரத்தை தூண்டவும் விரும்புபவர்கள் இதை பாராட்டுவார்கள் . குறுகலான பாதைகளில் , சாலைகளில் இந்துக்களின் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் கட்டப்பட்டு பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது . இதை இடிக்கவேண்டும் என யோகி கூறுவாரா ?


வைகுண்டாஸ்வரன், chennai
டிச 11, 2024 09:55

உன் பெயரில் உள்ளது. உன் புத்தி அப்படி தான் இருக்கும்


Mettai* Tamil
டிச 11, 2024 10:26

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்றினால் உடனே ,முஸ்லிம்களின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தவும் , மத கலவரத்தை தூண்டவும் என்று ஒரேமாதிரியான டயலாக் பேசுறத விடுங்க . நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக எத்தனையோ கோவில்களும் இடிக்கப்பட்டது தெரியாதா ....


பேசும் தமிழன்
டிச 11, 2024 08:05

ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்தால்.... மசூதி என்ன கோவில்... சர்ச்... எதுவாக இருந்தாலும் இடிக்க தான் செய்வார்கள்..... இது ஒரு செய்தி.....இங்கே தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில் கள் இடிக்கப்படுகிறது.... அதனை எந்த ஆர்எஸ் பாரதி ஊடகங்கள் வெளியிடுவதில்லை.


நிக்கோல்தாம்சன்
டிச 11, 2024 06:17

தமிழகத்தில் கோவையில் நண்பரின் வீட்டிற்கு முன்னாள் லாரியை நிறுத்தி வீட்டை விற்றுவிட்டு செல்ல அறிவுறுத்தும் கழக ப்ரோகருக்கும் இந்த உபி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகளவு வித்தியாசம் இருக்கா


rama adhavan
டிச 11, 2024 05:03

1839இல் எவ்வளவு பரப்பளவு கட்டடம், இடம் மசூதிக்கு சொந்தம்? பின்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டது எவ்வளவு? எங்கே இவ் விவரங்கள்?


raja
டிச 11, 2024 03:12

இங்கே கூட ரோடுகளே வராத ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோயில்களை எந்தலமையில் இடித்து அகட்ரினேன் என்று பெருமை பேசுகின்றான் ஒரு திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற bar ஆளும் உறுப்பினர்


தாமரை மலர்கிறது
டிச 11, 2024 01:23

ஆக்கிரமிப்பை அகற்றுவது அரசின் அவசிய வேலை.


முக்கிய வீடியோ