பா.ஜ., தேசிய செயற்குழுவில் கர்நாடக தலைவர்கள் பங்கேற்பு
புதுடில்லியில் நடந்து வரும் பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டத்தில், கர்நாடகாவின் 500க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுடில்லியின் பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில், இரண்டு நாட்களுக்கான பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று துவங்கியது.பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட நாடு முழுதும் இருந்து வந்திருந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இன்றும் இந்த கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், பா.ஜ.,வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பார்லிமென்ட் குழு உறுப்பினர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.மேலும், மாநிலத்தின் அனைத்து பா.ஜ., -- எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், பல்வேறு பிரிவுகளின் முக்கியஸ்தர்கள் உட்பட கர்நாடகாவைச் சேர்ந்த 50-0க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தங்களை எப்படி தயார்ப்படுத்திக் கொள்வது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, தேசிய தலைவர்கள் ஆலோசனை வழங்கினர்.இதன் பின், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், மாநில தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.