உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஸ்டேக் பயன்படுத்துவோர் 31க்குள் சுயவிபரம் தர உத்தரவு

பாஸ்டேக் பயன்படுத்துவோர் 31க்குள் சுயவிபரம் தர உத்தரவு

புதுடில்லி, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும், 'பாஸ்டேக்' பயன்படுத்துவோர், சுயவிபரங்களை 31ம் தேதிக்குள் பதிவு செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வாடிக்கையாளர் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் குறித்த விவரங்கள் கே.ஒய்.சி., என்ற பெயரில், 'ஆன்லைன்' வாயிலாகவும், நேரடியாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் என்ற ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. தேசிய மற்றும் தனியார் வங்கிகள், பண வங்கிகள், 'மொபைல்' சேவை நிறுவனங்கள் வாயிலாக, இந்த பாஸ்டேக் மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவை வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படுகிறது.சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, அங்குள்ள மின்னணு கருவி வாயிலாக, சுங்க கட்டணம் தொடர்புடையவரின் வங்கி கணக்கில் இருந்து கழித்து கொள்ளப்படும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம், இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பாஸ்டேக் வைத்துள்ள வாகன உரிமையாளர்கள் பலர், தங்களது முழு விவரங்களை பதிவு செய்யாமல் உள்ளனர். இவ்வாறு, பாஸ்டேக்கில் முழுவிவரங்களை பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள், வரும் 31ம் தேதிக்குள் அவற்றை பதிவு செய்யவேண்டும்.இதற்காக தங்களது வங்கிகள் மட்டுமின்றி சுங்கச்சாவடிகளின் இரண்டு புறங்களிலும் உள்ள தொடர்புடைய நிறுவனங்களின் ஏஜன்டுகளிடம், அவற்றை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு சுய விவரங்கள் பதிவு செய்யாத, வாகனங்களின் பாஸ்டேக் கணக்கு பிப்., 1ம்தேதி முதல் முடக்கப்பட உள்ளது. பாஸ்டேக் கணக்கில் பணம் இருந்தாலும், கணக்கு முடக்கப்பட்டு, தடைசெயப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.சுங்கச்சாவடிகளை தொடர்புடைய வாகனங்கள் கடக்கும்போது, அங்குள்ள மின்னணு டிஸ்பிளேவில், தடைசெய்யப்பட்ட வாகனம் என்ற வாசகம் ஒளிரும். அந்த வாகனங்களிடம் இரண்டு மடங்கு ரொக்க கட்டணம், வசூல் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி