உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செபி மட்டுமல்ல... ஐசிஐசிஐ.,யிடம் இருந்தும் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்ற மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செபி மட்டுமல்ல... ஐசிஐசிஐ.,யிடம் இருந்தும் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்ற மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செபி தலைவராக ஊதியம் பெறும் மாதவி, ஐசிஐசிஐயிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்தும் பணியை செயல்படுத்தி வருவது செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை வாரியம். செபியின் தலைவரை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ள கேபினட் கமிட்டியே நியமிக்கிறது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு 'செபி'அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் இருந்து தற்போது வரை செபி அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், செபி தலைவராக ஊதியம் பெற்று கொண்டு இருக்கும் மாதவி, ஐசிஐசிஐ.,யிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. 2017-ல் இருந்து இதுவரை ரூ.16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக மாதவி புரி புச் பெற்றுள்ளதாக காங்கிரசின் பவன் கெரா குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், ''செபி தலைவர் மாதவி, 2017 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வருமானமாக ரூ.16.8 கோடியை பெற்றுள்ளார். செபியின் முழு நேர அதிகாரியாக இருக்கும் மாதவி, ஐசிஐசிஐ வங்கியில் எப்படி ஊதியம் பெறலாம்?'' என பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

vijai
செப் 02, 2024 22:53

மூளை கெட்ட மூதேவிகளின் அறக்கூவல்


ஆரூர் ரங்
செப் 02, 2024 22:18

காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் வாரியத் தலைவராகவும் இருந்து இரண்டு வருமானம் பெறுவது நியாயமா? எந்த அரசுப் பதவியிலும் இல்லாத போதும் UPA ஆட்சியில் சோனியா பெற்ற சலுகைகள் ஏராளம்.


Kasimani Baskaran
செப் 02, 2024 21:11

பொய் சொல்லித்திரிவதில் காங்கிரசுக்கு தனிப்பட்ட நிபுணத்துவம் உண்டு. ஒரு நிறுவனத்தையே லவட்டி பல்லாயிரம் கோடிகளை சாப்பிட்டு ஜாமீனில் இருக்கும் வின்சி குடும்பம் பற்றி இதுகள் பேசாது.


GMM
செப் 02, 2024 20:49

ராகுலுக்கு ஊதியம் பற்றி குற்றச்சாட்டு கூறும் அளவுக்கு அறிவு குறைவா? ஏன் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் மூலம் குற்றச்சாட்டு? மாதவி ஐ சி ஐ சி ஐ யில் பணி 1990 முதல்? செபி தலைவர் ஆகி 2 வருடங்கள். செபி அரசு அமைப்பு. வங்கி தனியார் நிறுவனம். ஊதியம் பெறுவது ஊழல் ஆகுமா? ஐ டி இரு நிறுவனங்களின் ஒருவர் ஊதியம் பெறும் வழக்கம் உண்டு. இரு இடங்களில் ஊதியம் பெறுவது தவறு என்று தெரியாமல் மாதவி இருக்க வாய்ப்பு இல்லை. அவர் சமசீர் கல்வி பயின்றவர் அல்ல. மேற்கத்திய பங்கு சந்தைக்கு அதிர்ச்சி கொடுத்தவர்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, கூட்டு குழு, கூச்சல் ஆரம்பம் ஆகட்டும். நாடே ஊழலில் ஊறிய பின், ஊழல் புரியாமல் பிஜேபி மட்டும் அரசியல் நடத்த விடுவோமா?


nagendhiran
செப் 02, 2024 20:40

கேபரே கூட்டம் எப்பவும் ஆதாரம் இல்லாமல்தான் கூவுங்க?


ஆரூர் ரங்
செப் 02, 2024 19:06

இவனையெல்லாம் மதித்து மாதவி வழக்குப் போடப்போவதில்லை . அந்த தைரியத்தில்தான் பேசுகிறார். இவங்க ஆட்சி நடந்து கொண்டு இருந்தபோது காஷ்மீரில் பல தீவீரவாதிகள் அரசு ஊழியர்களாக சம்பளமும் வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு காண்ட்ராக்ட்களும் தந்து கொண்டிருந்தார்கள் என செய்திகள் வந்தன. அதாவது நம் வரிப்பணத்தை வாங்கி பயன்படுத்தி நம்மை எதிர்த்தே பயங்கரவாதம் நடந்து கொண்டிருந்தது.


கோபாலகிருஷ்ணன்
செப் 02, 2024 18:52

சரிதான் சுப்ரமண்யா.....முறைகேடு நடந்தது, செபி தலைவர் பதவியில் இறக்கியிருக்க வேண்டும், ஆனால் குற்றம் என்று சொல்லும் எவனாச்சும் ஒருவன் தகுந்த ஆதாரத்தோடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாமே.....அத செய்ய மாட்டீங்க மோடி மத்திய அரசுக்கு எதிராக ஒரு குக்கிராமத்தில் இருக்குறவன் மோடி ஸ்கீமுல கட்டிய எங்க வீட்டு கக்கூஸ் அடைப்பு ஏற்பட்டது அதுக்கு காரணம் மோடிதான்னு சொல்லிட்டா போதுமே....உடனே காமன்ட் போட வந்துருவீங்களே....!!!


Duruvesan
செப் 02, 2024 17:56

சரி நீ ஏன் கேஸ் போட கூடாது? அரசுஊழியர் ரெண்டு வேலை செய்ய கூடாது, எவ்வளவு நாளைக்கு இப்படியே uruttuve


rsudarsan lic
செப் 02, 2024 17:22

இந்த கேசலையாவது உண்மை இருக்கா பார்க்கலாம். இல்லேன்னா மட்டும் தூக்கா மாட்டிக்க போறாங்க?


rsudarsan lic
செப் 02, 2024 17:19

எப்பூடி?


புதிய வீடியோ