வாசகர்கள் கருத்துகள் ( 1 )
biscuits and other consumables are still in plastic wraps. they are the most pollutants. govt has no tooth to handle them
பெங்களூரு : காதலர் தினத்தன்று, பிளாஸ்டிக் பேப்பரில் பூக்களை சுற்றிக் கொடுத்த வியாபாரிகளுக்கு, பெங்களூரு மாநகராட்சி 'ஷாக்' கொடுத்துள்ளது.பெங்களூரில் பிளாஸ்டிக் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு, மாநகராட்சி தடைவிதித்து பல ஆண்டாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி, டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்; அபராதம் விதிக்கின்றனர். ஆனாலும் பிளாஸ்டிக்க பயன்பாடு தொடருகிறது.காதலர் தினத்தன்று, பெங்களூரில் லட்சக்கணக்கான ரோஜா பூக்கள் விற்பனை ஆனது. பூக்களை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு, மாநகராட்சி 'ஷாக்' கொடுத்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி, ரோஜாக்களை விற்றதால் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இதுவரை 959 பூ வியாபாரிகளிடம், 2.46 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆங்காங்கே சோதனை நடந்து வருகிறது. ரோஜாக்கள் விற்றதில் நல்ல லாபம் கிடைத்தது என, வியாபாரிகள் குஷியடைந்தனர். ஆனால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கொடுத்தவர்கள் அபராதம் செலுத்த வேண்டி உள்ளது.
biscuits and other consumables are still in plastic wraps. they are the most pollutants. govt has no tooth to handle them