உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம்

ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அபராதம்

பெங்களூரு :லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.கர்நாடகாவில் செயல்படும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33; நான்கு பலாத்கார வழக்குகளில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த மே 2ம் தேதி, கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'பிரஜ்வல், 400 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்' என, குற்றம் சாட்டினார்.பெண்களின் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் ராகுல் கருத்து கூறியதாகவும், அவர் மீது கர்நாடக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அகில இந்திய தலித் நடவடிக்கை குழுவின் தேசிய தலைவர் ராமு, குழுவின் தேசிய மகளிர் பிரிவு தலைவர் சுசிலா தேவராஜ் ஆகியோர் குற்றம் சாட்டினர்.ராகுல் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராமு, சுசீலா தேவராஜ் பொதுநல மனுவும் தாக்கல் செய்தனர். மனுவை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் அமர்வு விசாரித்தது. மனு மீது நேற்று விசாரணை நடந்தது. மனுதாரர்கள் தரப்பு வக்கீல் ரவிசங்கர் வாதாடுகையில், ''பிரஜ்வல் 400 பெண்களை பலாத்காரம் செய்தார் என, பொது இடத்தில் ராகுல் பேசி உள்ளார். ''ஓட்டுக்காக பொறுப்பற்ற முறையில் இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.அரசு வக்கீல் நிலோபர் அக்பர், ''இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.நீதிபதிகள், 'இந்த மனுவில் பொது நலன் எதுவும் இல்லை' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், 'மனுதாரர்கள் அபராத தொகையாக 25,000 ரூபாயை வக்கீல்கள் சேம நல நிதிக்கு செலுத்த வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

shyamnats
அக் 22, 2024 12:03

பிரஜ்வல் 400 பெண்களை பலாத்காரம் செய்தார் என, பொது இடத்தில் ராகுல் பேசி உள்ளார் - இவர் ஆதாரத்தோடுதான் பேசுகிறாரா? ஆம் என்றால் ஏன் காவல் துறையில் புகாரளிக்கவில்லை ? ஆதாரமில்லை என்றால் கோர்ட் ஏன் தானாக முன்வந்து விசாரிக்க கூடாது ?


Anand
அக் 22, 2024 10:54

காங்கிரசின் அடிமட்ட தொண்டனுக்கும் நீதிபதி பதவி கிடைத்துள்ளது...


RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2024 10:28

காங்கிரஸ் தலைமைக் குடும்பத்தைச் சட்டம் தொடக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மன்றம் விரும்புகிறது ......


Nandakumar Naidu.
அக் 22, 2024 09:53

காங்கிரசின் கொத்தடிமை நீதிபதியாக இருப்பான் போல.


Mohamed Younus
அக் 22, 2024 10:17

உங்களுக்கு எதிராக தீர்பளித்தால் இந்த நாட்டின் நீதிபதிகளை குறை சொல்வதா ? அப்ப காங்கிரசுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை என்ன கூறுவது ?


பாமரன்
அக் 22, 2024 08:32

நல்லவேளை பூலோக சொர்க்கம் குசராத்துல யாரும் இந்த மாதிரி ஒரு தெண்ட வழக்கை போடலை... தேவைப்பட்டா நிதிபதியை மாற்றி தீர்ப்பை வாங்கியிருப்பாய்ங்க.. விடுவோம்.. இந்த கேஸை தள்ளுபடி செய்து ஃபைன் போட்ட ஐயாவுக்கு....


பாமரன்
அக் 22, 2024 09:07

ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி...


Kasimani Baskaran
அக் 22, 2024 05:37

அதாவது தனிப்பட்ட லாபத்துக்காக இராகுல் பொய்ச்சொல்வதில் ஆட்சேபனை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பாமரன்
அக் 22, 2024 09:24

என்ன பண்றது..?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 21, 2024 23:34

பொது நலன் இல்லை என்றால்....400 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததை நிரூபிக்க வேண்டுமல்லவா....பொத்தாம் பொதுவா குற்றம் சுமத்தும் அவர்மீது நடவடிக்கை இல்லை....வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்....நீதி, நியாயம் கேலிகூத்தாய் இருக்கு....!!!


Sathyanarayanan Sathyasekaren
அக் 21, 2024 23:34

ஆகா திருட்டு கான் ஸ்கேம் காங்கிரஸ் போலி காந்தி, ராகுல் வின்சி என்னவேண்டுமானாலும், எவ்வளவு பொய் பேசலாம், ஆதாரம் இல்லாமல் அள்ளி வீசலாம். எவரும் கேள்வி கேட்கக்கூடாது. நல்ல நீதிபதிகள் விளங்கிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை