பெங்., - சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம்
பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து, சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:ஆண்டு தோறும் கர்நாடகாவில் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், அய்யப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்வர். இம்முறையும் செல்வர். பயணியர் நெரிசலை தவிர்க்கும் நோக்கில், மூன்று மாதம் சிறப்பு ரயில் இயக்கப்படும்.கொச்சுவேலி - எஸ்.எம்.வி.டி., எனும் சர் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு இடையே, சிறப்பு ரயில் இயங்கும். 06083 எண் கொண்ட இந்த ரயில், கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து, நாளை முதல் 2025 ஜனவரி 28 வரை வாரந்தோறும் செவ்வாய் கிழமை மாலை 6:05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 10:55 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களுரை அடையும்.எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கொச்சுவேலி, 06084 எண் கொண்ட, சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 13லிருந்து, 2025 ஜனவரி 29 வரை, வாரந்தோறும் புதன்கிழமை மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு கொச்சுவேலியை அடையும்.இந்த ரயில்கள், கொல்லம், காயன்குளம், செங்கனுார், பாலக்காடு, பதனுார், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை சந்திப்புகளில் நின்று செல்லும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், செங்கனுாரில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில் பம்பைக்கு செல்லலாம்.இது தொடர்பாக, கூடுதல் தகவல் வேண்டுவோர், ரயில்வேத் துறையின் www.enquiry.indianrail.gov.inஇணைய தளத்தை தொடர்பு கொள்ளவும். என்.டி.இ.,எஸ்., செயலி அல்லது உதவி எண் 139ல் தொடர்பு கொண்டு, ரயில் புறப்படும் நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.