உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் வாக்குறுதி நிறைவேறும் என மக்கள் காத்திருப்பு: கெஜ்ரிவால் பதில்

பிரதமரின் வாக்குறுதி நிறைவேறும் என மக்கள் காத்திருப்பு: கெஜ்ரிவால் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' 2020 ல் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என மக்கள் காத்திருக்கின்றனர், '' என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில் இன்று(ஜன.,05) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசை விமர்சித்து பேசினார். மத்திய அரசுடன் மோதுவதிலேயே ஆம் ஆத்மி நேரம் செலவு செய்வதாகவும், பா.ஜ.,வுக்கு மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.இதற்கு பதிலடி கொடுத்து கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களின் தலைவர்களை அவர்கள் சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால், எங்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களை நாங்கள் பிரச்னை ஆக்கவில்லை. நாங்கள் மக்களுக்காக உழைத்தோம். இல்லை என்றால், இன்று துவக்கப்பட்ட திட்டங்கள் வந்து இருக்காது. நாங்கள் எவ்வாறு எங்களின் பணிகளை முடித்தோம் என்பதற்கு எங்களின் கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகளே ஆதாரம்.இன்று 30 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, டில்லி மக்களையும், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசையும் விமர்சித்து பேசினார். இதைக் கேட்ட எனக்கு கவலை ஏற்பட்டது. 2020 ல் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் இன்று வரை காத்துக் கொண்டு உள்ளனர்.டில்லி நில சீர்திருத்த சட்டத்தில் சில பிரிவுகள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். இது குறித்து சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த முறை டில்லியில் பேச வரும் மோடி, இது குறித்தும் சிறிது பேச வேண்டும்.டில்லி தேர்தலுக்கான பிரதமர் மோடியின் ஒரு கொள்கை ஆம் ஆத்மி அரசை துஷ்பிரயோகம் செய்வதே. பிரதமர் மோடி தினமும் டில்லி மக்களை துஷ்பிரயோகம் செய்கிறார். அவர்களை அவமதிக்கிறார். தேர்தலில் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ganesh
ஜன 06, 2025 11:13

முன்பு எல்லாம் 1 காஷ்மீர் problem இருக்கும் 2 அயோத்தி பிரச்னை இருக்கும் 3 பாகிஸ்தான் பிரச்சினை இருக்கும்... இப்போ இந்த பிரச்சினை இல்லை... இந்த மாதிரி பாரத பிரதமர் க்கு ஏத்த வேலைய சொல்லுங்க / கேளுங்க சார்... கவுன்சிலர் பண்ற வேலை எல்லாம் அவர பண்ண சோல்லறீங்க... ???


அப்பாவி
ஜன 06, 2025 08:41

அதான் இன்னும் 25 வருஷத்தில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேத்தி வல்லரசாக்கிடுவோம்னு பேசுறாரே. 2050 ல வந்து பாரு.


C.SRIRAM
ஜன 06, 2025 03:15

நீ என்ன உளறினாலும் எதற்கு நாற்பது கோடிக்கும் அதிகம் செலவு செய்து முதல்வர் வீட்டை புதுப்பிக்க வேண்டும் கேட்டல் ஆம் ஆத்மீ என்று புளுகு வேறு


தாமரை மலர்கிறது
ஜன 06, 2025 00:39

டெல்லி தேர்தல் கெஜ்ரியின் கடைசி ஆட்டத்திற்கு முடிவுரை எழுதும்.


SUBBU,MADURAI
ஜன 05, 2025 21:27

Sources say Kejriwal is planning to change his seat after BJP fielded Parvesh Verma from New Delhi seat. He has instructed his team to find a safe seat with above 30% Muslim population.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை