உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆளுக்கு ஒரு கேன்...! நீ இங்க வா மேன்! தடம்புரண்ட சரக்கு ரயிலில் டீசலை அள்ளிய மக்கள்

ஆளுக்கு ஒரு கேன்...! நீ இங்க வா மேன்! தடம்புரண்ட சரக்கு ரயிலில் டீசலை அள்ளிய மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலில் இருந்த டேங்கரில் கொட்டிய டீசலை ஊர் மக்கள் ஆளாளுக்கு அள்ளிக் கொண்டு பறந்தனர்.மத்திய பிரதேசம் ரத்லம் அருகே டீசல் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று ராஜ்கோட்டில் இருந்து போபால் அருகே உள்ள பகானியா-போரி என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. ரத்லம் ரயில் நிலையம் சென்றடையும் ஒரு கிலோ மீட்டர் முன்பாக எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள் மீட்பு பணிக்கு உத்தரவிட்டு உள்ளதோடு விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் சரக்கு ரயிலில் இருந்த டேங்கரில் கொட்டிய டீசலை ஊர் மக்கள் ஆளாளுக்கு பிடித்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரயில் டேங்கரில் டீசல் இருப்பதை அறிந்த ஆண்கள்,பெண்கள் அங்கு திரண்டனர். கையோடு கொண்டு சென்றிருந்த பக்கெட்டுகள், கேன்கள் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிக் கொண்டு பறந்தனர். சிலர் சிறு, சிறு பிளாஸ்டிக் கேன்களில் கிடைத்த டீசலை நிரப்பிக் கொண்டனர்.டீசல் மாசடைந்து இருக்கிறதே என்ற எந்த கவலையும் இல்லாமல், இஷ்டம் போல அள்ளிக் கொண்டு தங்கள் வாகனங்களில் ஜெட் வேகத்தில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nandakumar Naidu.
அக் 04, 2024 20:23

நம் மக்களை திருத்த முடியாது.


அப்பாவி
அக் 04, 2024 20:11

என்ன மாசு? கொட்டுன டீசலை இவிங்க அள்ளிக்கிட்டு போயிருக்காங்க. க்ளீன் பண்ற செலவு மிச்சம்.


RAMAKRISHNAN NATESAN
அக் 04, 2024 17:09

சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் புதிதாகப் போடப்பட்ட தார் சாலையில் இருந்து ஜல்லிகளைப் பெயர்த்து எடுத்து தட்டுக்கூடைகளில் போட்டு எடுத்துச் சென்ற பொதுமக்களின் வீடியோ பார்த்தேன் ... சுதந்திரம் பெற்ற பயன் இதுதானா ????


Rajathi Rajan
அக் 04, 2024 16:53

அங்கு ஆளும் தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியோ


Venkatesan S
அக் 04, 2024 16:45

இது மிகவும் ஆபத்தானது. டீசல் தீ பிடித்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை