உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி

மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: '' மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்,'' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. கோல்கட்டாவில் நிருபர்களைச் சந்தித்த அமித்ஷா, பாஜவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மம்தா தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது எனக்குற்றம்சாட்டினார்.இந்நிலையில் பங்குராவின் பிர்ஷிங்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். இப்பணி காரணமாக மேற்கு வங்கத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். ஏஐ உதவியுடன் எஸ்ஐஆர் நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய மோசடி. தகுதி வாய்ந்த வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்.தேர்தலுக்கு முன்பு பொற்கால வங்காளத்தை உருவாக்குவோம் என்கின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களில் வங்கத்தை சேர்ந்தவர்களை தாக்குகின்றனர். மேற்கு வங்க மக்கள் பாஜ ஆட்சிக்கு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

sankaranarayanan
டிச 30, 2025 22:02

மேற்கு வங்கத்தையே உரு தெரியாமல் சின்னாபின்னமாக மாற்றி இப்போது மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள், என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தல் சமயத்தில் அவருக்கே தெரிந்த யோஜனையின்படி கீழே விழுந்துவிட்டதால் சக்கர நாற்காலியில் ஊர்ந்து சென்று தனக்கே தெரிந்த யோஜனையின்படி வாக்கு சேகரிப்பார் இது அவர்க்கு கைதேர்ந்த கலை ஆனால் இனி அந்த கலை மக்களை ஏமாற்றவே முடியாது சக்கர நாற்காலியிலேயே அவர் இனி உறங்கவேண்டியதுதான் ஆட்சி அவரை விட்டு அகன்றுவிடும்


sankaranarayanan
டிச 30, 2025 22:02

மேற்கு வங்கத்தையே உரு தெரியாமல் சின்னாபின்னமாக மாற்றி இப்போது மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள், என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தல் சமயத்தில் அவருக்கே தெரிந்த யோஜனையின்படி கீழே விழுந்துவிட்டதால் சக்கர நாற்காலியில் ஊர்ந்து சென்று தனக்கே தெரிந்த யோஜனையின்படி வாக்கு சேகரிப்பார் இது அவர்க்கு கைதேர்ந்த கலை ஆனால் இனி அந்த கலை மக்களை ஏமாற்றவே முடியாது சக்கர நாற்காலியிலேயே அவர் இனி உறங்கவேண்டியதுதான் ஆட்சி அவரை விட்டு அகன்றுவிடும்


சந்திரசேகர்
டிச 30, 2025 21:55

போன தடவை தேர்தலுக்கு கால்ல கட்டு போட்டீங்க.இந்த தடவை எங்கே கட்டு போடப்போறீங்களோ தெரியவில்லை. வங்காள மக்கள் திரைப்படம் பார்க்க மாட்டார்கள் போலிருக்கிறது


ராமகிருஷ்ணன்
டிச 30, 2025 21:21

தில்லுமுல்லு திரிணாமுல் கட்சியினர் திராவிட கட்சிகளை விட மிக மோசமான கும்பல். இந்த முறை SIR கணக்கீடு களினால் இவர்களின் கொட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Thravisham
டிச 30, 2025 21:08

ஒன்னோட காட்டாட்சியையே அனுமதிச்சவங்க பாஜகவை அனுமதிக்க மாட்டாங்களா? உன்னுடைய ஓய்வு காலம் நெருங்குகிறது.


Modisha
டிச 30, 2025 19:11

தேர்தலுக்கு பிறகு மக்கள் உன்னை இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க மாட்டார்கள் .


GMM
டிச 30, 2025 18:37

எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். இது போல் மன்ற தீர்வை விமர்சிக்க முடியுமா? படம் பார்த்து கதை சொல் என்ற எளிய பணி. உயிர் இழந்து தான் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்றால், ஆண்டுக்கு ஒரு முறை அரசு ஊழியருக்கு மருத்துவ, மனநல சான்று கட்டாயம். எந்த தொழில் நுட்பமும் பாகுபாடு காட்டாது. தகுதி வாய்ந்த வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், மன்றத்தில் வழக்கு. டில்லியில் போராட்டம் என்றால் மிரட்டல்.


ரவீந்திரன்
டிச 30, 2025 19:39

பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லை. செத்து போனவர்கள் வாக்குரிமை கேட்க மாட்டார்கள். அவர்கள் பெயரில் கள்ள ஓட்டு போட்ட அரசியல் கட்சிகள் கூறுகின்றனர்


Thravisham
டிச 30, 2025 21:04

உன்னுடைய 200 ரொம்ப நேரத்துக்கு வராது. பொய்யான தகவலை பரப்பி ஒன்னோட குடும்பத்தை பாழாக்கி கொள்ள வேண்டா. கடவுள் இருக்குறாரு கொமாரு.


Rathna
டிச 30, 2025 17:52

இந்த நாட்டின் சாப கேடு பல மாநிலங்களில் தேச விரோத சக்திகள், தேச பக்தியை எதிர்க்கும் கும்பல்கள், தேசியத்தின் வரலாற்றை மாற்றி எழுதும் கூட்டங்கள், தேசிய கீதத்தையே எதிர்க்கும் சில்லுகள் ஆட்சியில் உள்ளது. அது ரவ்டிகளையும், உள்ளூர் மாவட்ட ஊழல் சிற்றரசர்கள், ஹவாலா மர்ம நபர்களின் துணையோடு ஆட்சி என்ற பெயரில் கூட்டு களவாணித்தனம் செய்வது, மக்களுக்கு தெரிந்தும் அவர்களை குடியில், இலவசத்தில், போதையில் ஆழ்த்தி நாட்டை உருப்படாமல் செய்கிறது.


Arijit Singh
டிச 30, 2025 17:19

Mamataji are the one side leader. West Bengal people already decided.


என்றும் இந்தியன்
டிச 30, 2025 17:13

மேற்கு வங்க மாக்கள் பாஜவை அனுமதிக்கமாட்டார்கள் : மம்தா பதிலடி. இப்படி படியுங்கள் சரியான அர்த்தம் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை