உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு ஐ.நா., சபையில் நிரந்தர இடம்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு ஐ.நா., சபையில் நிரந்தர இடம்... பிரிட்டன் முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.இது குறித்து ஆங்கில டி.வி.,சேனலுக்கு அளித்த பேட்டியில் கேமரூன் கூறியதாவது:இன்றைய உலகிற்கு பலமான பொருளாதார வளர்ச்சி, மிகுதியான ஜனநாயகம், பருவகால மாற்றத்திற்கு ஒரு பசுமை மாற்றம் ஆகிய மூன்றிலும் இந்தியா ஒளிர்கிறது.பிரதமர் மோடியின் பேச்சு மிகப்பெரியது. அவரது ஆளுமை மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியால் 3வது முறையும் பிரதமராகி உள்ளார்.ஆனால், எங்களால் 3வது முறை பிரதமராக முடியவில்லை. அவரது திறமையால் உண்மையான மாற்றம், உண்மையான எண்ணங்களால் மிகச்சரியான பாதை ஆகியவற்றை இங்கு பார்க்கின்றோம்.2ம் உலகப்போருக்கு பின்னர் உலகம் மாற்றம் நிறையவே கண்டிருக்கிறது.இன்றைக்கு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது. மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்கிற பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் கட்டாயம் இடம் தர வேண்டும்.இந்தியாவுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் தர வேண்டும் என்ற கேள்வி 2015ல் எழுந்தது.2005ல் நான் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைவராக இருந்தபோது, இதற்கான விவாதம் எழுந்தது. அப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டது.இந்திய வம்சாவளியை சேர்ந்த இருந்த ரிஷி சுனாக் பிரதமராக இருந்தார். அவரிடம் வெளியுறவு செயலராக நான் பெருமையாக கருதுகிறேன்.இந்தியாவிற்கு வரும் காலத்தில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு டேவிட் கேமரூன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
அக் 22, 2024 05:53

நேரு செய்த கெடுதலை இன்னும் சரி செய்ய முடியவில்லை. ஆகவே ஐநாவில் இருந்து இந்தியா வெளியேறி தனியான ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம்.


T.sthivinayagam
அக் 21, 2024 22:42

பத்து வருடமாக பிஜேபி போடும் பிட் இதுதான்


N Sasikumar Yadhav
அக் 22, 2024 04:56

உங்க எஜமான் நாடான சீனா தடுக்கிறது என்ன செய்ய முடியும் பாரதம் . பாரத நாட்டிற்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுத்தால் இசுலாமிய பயங்கரவாத தாக்குதல்கள் தடுக்கப்படும் தேவையில்லாத போர்களும் தடுக்கப்படும் சீனாவின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும்


Sudha
அக் 21, 2024 20:40

ஆஹா ஆஹா அற்புதம்


ponssasi
அக் 21, 2024 18:35

ஐநா ஒரு வீணாப்போன அமைப்பு. எந்த நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளையோ, போரையோ, பசி, பட்டினி, பருவநிலை மாற்றம் என எதையும் தீர்க்கமுடியவில்லை. எல்லா நாடு பிரதிநிதியும் வந்து உரையாற்றலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம், அது சரியா? தவறா? அதற்க்கு என்ன தீர்வு என எதுவும் எட்டப்படுவதில்லை. பின் ஏன் ஐநா அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதனால் உலகுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது. உலக நாடுகள் ஒன்றுகூடி ஏழை, பணக்காரன் என பாகுபாடு இல்லா ஒரு வலிமை வாய்ந்த அமைப்பை ஏற்படுத்தி அதில் எல்லா நாடுகளும் சம அதிகாரம் அளித்து செயல்படவேண்டும். அதில் தான் பெருமை


GMM
அக் 21, 2024 18:33

ஐக்கிய நாடுகள் சபை முற்றிலும் மாற்றி அமைக்கவேண்டும். 5 கண்டங்களுக்கு பாதுகாப்பு தலைமை நியமிக்க வேண்டும். ஆசியாவிற்கு இந்தியா . கம்யூனிஸ்ட் நாடுகள் ராணுவ பலம் பெற்று இருந்தாலும் ஜனநாயகம் மலரும் வரை தற்காலிக உறுப்பினர் அங்கீகாரம் மட்டும்.